கரூரில் தொடர்ந்து 2வது நாளாக சிவா டெக்ஸ்டைல்ஸில் ரெய்டு

கரூர், குளித்தலையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் அதிக வரி ஏய்ப்பு செய்ததும், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

Continues below advertisement

தீபாவளி விற்பனை கணக்கை முறையாக காட்டாததாக கரூரில் ஜவுளி கடையில் வருமான வரித்துறையினர் நேற்று காலை அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர், ஜவகர் பஜார், குளித்தலை, பெரியாண்டவர் கோவில் ஆகிய இடங்களில் சிவா டெக்ஸ்டைல்ஸ் என்ற ஜவுளி நிறுவனம் பத்தாண்டுகளாக இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் கரூர் செங்குந்தபுரத்தை சேர்ந்த சரவணன் (50). தீபாவளி பண்டிகையின் போது நடைபெற்ற வியாபாரம் சம்பந்தமாக வரி ஏய்ப்பு நடைபெற்றதாக வருமானவரித் துறையினர்களுக்கு தகவல் வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் கோவை வருமான வரித்துறை ஆணையர் பாலாஜி தலைமையில் 15 க்கும் மேற்பட்ட குழுவினர், ஜவஹர் பஜாரில் உள்ள ஜவுளி நிறுவனத்திற்குள் அதிரடியாக உள்ளே சென்று சோதனை நடத்தினர்.

Continues below advertisement


 

கரூர் சிவா டெக்ஸ்டைல்ஸ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில், இரண்டாவது நாளாக வருமானவரித்துறை சோதனை நடத்தினர். கரூர் மாநகரில் பிரபல ஜவுளிக்கடையான சிவா டெக்ஸ்டைல்ஸ் கடையில் நேற்று காலை முதல் வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுபட தொடங்கினர். இந்த சோதனையானது கரூர் ஜவகர் பஜார் சிவா டெக்ஸ் ஜவுளி கடை, ஜவுளி வைக்கும் கிடங்கு, ஆண்டாள் கோவில் பகுதியில் உள்ள வீடு, குளித்தலையில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் ஜவுளிக்கடை மற்றும் வீடு என ஐந்து இடங்களில் நேற்று தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நடைபெற்றது. மீண்டும் இன்று இரண்டாவது நாளாகவும் கரூர் சிவா டெக்ஸ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில், இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெறும் சோதனையால் இவர்கள் வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என தெரிய வருகிறது. வருமான வரிதுறை சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றபடலாம் என்று சொல்லப்பட்டு வந்தது.


கடைக்குள் பணியாளர்களும் வாடிக்கையாளர்களும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து ராமானுஜம் நகரில் உள்ள ஜவுளி கடை உரிமையாளரின் வீடு, கோவை சாலை மற்றும் ஜவஹர் பஜாரில் உள்ள குடோன் ஆகிய நான்கு இடங்களிலும் நேற்று காலை முதல் மாலை வரை தொடர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், இந்த ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு கடை கரூர் மாவட்டம் குளித்தலையிலும் உள்ளது. அங்கும் இந்த குழுவினர் சோதனை நடத்தினர். கரூர், குளித்தலையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் அதிக வரியைப்பு செய்ததும், முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.


சிவா டெக்ஸ்டைல்ஸில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெறுவதால் அங்கு பணி செய்யும் பணியாளர்கள், அலுவலர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. அவர்களை நேற்று காலையிலேயே வீட்டிற்கு செல்ல சொல்லி வருமானவரித்துறையினர்கள் அறிவுறுத்தினார்கள். அதன்படி இன்றும் தொடர்ந்து சிவா டெக்ஸ்டைல்ஸில் சோதனை நடைபெற்று வருகிறது. இன்னும் சிவா டெக்ஸ்டைல்ஸின் சோதனை நிலவரம் என்னவென்று தெரியவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு குழப்பம் நீடிக்கிறது. தீபாவளி பண்டிகை ஒட்டி சிவா டெக்ஸ்டைல்ஸ் அமோகமாக விற்பனையானதால் அந்த விற்பனைக்கு உரிய வரி காட்டவில்லை என்று தகவல் கூறப்படுகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola