தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஆன்மீகத்தில் முக்கியமானது ஆகும். அந்த வகையில், புரட்டாசி மாதம் ஏராளமான சிறப்புகளும், தனித்துவமும் வாய்ந்தது ஆகும். புரட்டாசி மாதமானது பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுகிறது.


பிறந்தது புரட்டாசி:


பெருமாளுக்கு உகந்த மாதமாக இந்த புரட்டாசி கருதப்படுவதால் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துவிடுவார்கள். புரட்டாசி மாதம் இன்று பிறந்துள்ளது. இதனால் இன்று முதல் பெரும்பாலான இறைச்சி மற்றும் மீன் கடைகளில் வியாபாரம் மந்தமாகத் தொடங்கியுள்ளது.


சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி போன்ற பெருநகரங்களிலும் உணவகங்கள் இறைச்சிகள் வாங்கும் அளவை வழக்கத்தை விட சற்று குறைவாகவே வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக, தமிழ்நாட்டில் திங்கள் முதல் வெள்ளி வைர பெரியளவில் இறைச்சி மற்றும் மீன்கள் விற்பைன இருக்காது. சனிக்கிழைம ஓரளவு விற்பைன கறிக்கடைகளில் நடைபெறும். வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் தமிழ்நாடு முழுவதும் மீன், கோழி மற்றும் ஆட்டுக்கறி விற்பனை அமோகமாக நடைபெறும்.

டல்லடிக்கத் தொடங்கிய இறைச்சி விற்பனை:


ஆனால், புரட்டாசி பிறந்துள்ளதால் இந்த வார ஞாயிற்றுக்கிழமை மீன், கோழி மற்றும் ஆடு விற்பனை மந்தமாகும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வைணவ தலங்கள் மட்டுமின்றி பெரும்பாலான கோயில்களில் புரட்டாசி மாதத்தில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெறும் என்பதாலும் பக்தர்கள் அதில் பங்கேற்பார்கள் என்பதாலும் அசைவங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பார்கள்.


மீனவர்களும் கடலுக்குச் சென்று வழக்கத்தை விட குறைவான அளவே மீன்களை கரைக்கு கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரியில் உள்ள ஆட்டுச்சந்தை போன்ற தமிழ்நாட்டின் புகழ்பெற்ற இறைச்சி சந்தைகளிலும் வியாபாரம் இந்த மாதம் மந்தமாகவே நடைபெறும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


அதேசமயம், சில இடங்களிலும் பெரிய நட்சத்திர விடுதிகளிலும் இறைச்சி விற்பனையும், இறைச்சி உணவுகளும் வழக்கம்போலவே விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்மீக ரீதியாக மட்டுமின்றி புரட்டாசி மாதத்தில் இருந்து குளிர்காலமும், மழைக்காலமும் தொடங்குவதால் கால நிலை மாற்றம் ஏற்றப்படும். இந்த காலகட்டத்தில் அசைவம் சாப்பிடும்போது காலநிலை மாற்றத்திற்கும், உடல் வெப்ப நிலைக்கும் ஒத்துக்கொள்ளாத சூழல் ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்படும் காரணத்தினாலும் பலர் இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.