அடிக்கடி பூட்டிய படி கிடக்கும் சதுரங்கப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலகம். அரசு விதிகளை மதிக்காமல் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர். நடவடிக்கை எடுப்பாரா செங்கல்பட்டு கோட்டாட்சியர்? என்று கேள்வி எழுப்புகின்றனர் அப்பகுதி மக்கள்
ரஹ்மத்துல்லா - சதுரங்கப்பட்டினம், செங்கல்பட்டு அனுப்பி வைத்த புகார் . செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் சதுரங்கப்பட்டினம் வருவாய் கிராமத்தில் சுமார் 18000- க்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் வருவாய் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அலுவலகம் அடிக்கடி பூட்டப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் தங்களுடைய தேவைகளை பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ரகமதுல்லா நம்மிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசுகையில் : தமிழக அரசாணையின்படி கிராம நிர்வாக அலுவலர் பணிபுரியும் பகுதியிலேயே வசிக்க வேண்டும். ஆனால் சதுரங்கப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் உமாபதி அவர்கள் வெளியூரில் வசிப்பதால் அலுவலகத்திற்கு தாமதமாக வருவதாகவும் மாலையில் முன்னதாகவே அலுவலகத்தை பூட்டி விடுவதாகவும் அரசு பணிக்காக வெளியில் சென்றால் எங்கே செல்கிறோம் எப்போது அலுவலகம் திறக்கப்படும் என்று அறிவிப்பு பலகையில் குறிப்பிடாமல் சென்று விடுவதாகவும், ஏழை எளிய பொதுமக்களிடம் கடுகடுப்பாக நடந்து கொள்வதாக பொதுமக்கள் புலம்புவதாக ரஹமதுல்லா தெரிவித்துள்ளார்.
மாவட்ட நிர்வாகம் தலையிட கோரிக்கை
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வாக்காளர்கள் உடைய பெயர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு கிராம நிர்வாக அலுவலரே முதன்மையான காரணம் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர். சதுரங்கப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் தொடர்பாக பல புகார்கள் கொடுக்கப்பட்டும் இன்று வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியாவது மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் தங்கள் தேவைகளை தங்கு தடை இன்றி பெற்றுக்கொள்ள உதவி செய்ய வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Pugar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!
உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன செய்து மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா? ஆன்லைன் வெளியில் நடக்கும் மோசடிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதா?
கவலையே வேண்டாம்.
சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கக் காத்திருக்கிறது புகார் பெட்டி. ABP NADU தொடங்கியுள்ள புகார் பெட்டி, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகச் செயல்பட உள்ளது. மக்கள் தங்களைச் சுற்றிலும் நடக்கும் முறைகேடுகளை, நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத குறைகளை புகார் பெட்டி மூலம் தீர்க்கலாம். சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்முடைய பங்கு சிறிதேனும் இருக்க வேண்டும் என்று யோசிப்பவரா நீங்கள்? நீங்களும் புகார் பெட்டியை அணுகலாம்.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம்.