புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் பார்வையற்றமாற்றுத்திறனாளி இளைஞரை தாக்கிய முதல் நிலை காவலர் செந்தில், காவலர்கள் அசோக் மற்றும் பிரபு ஆகிய மூவரும் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டநிலையில், 3 காவலர்கள் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மது விற்பனை குறித்து மாற்றுத்திறனாளி இளைஞர் தொடர்ந்து புகார் அளித்து வந்தநிலையில் காவலர்கள் அவரை தாக்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்