அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே பொதுவாகவே கன்னி ராசியை பெண்கள் ராசி என்று கூறுவார்கள் அதாவது பெண்கள் சுற்றி சுற்றி வரும் ராசி என்று கூறுவார்கள் அது உண்மைதான்... காதல் தேவதை புதன் உச்சமாகும் இடம் கன்னி ராசியில் தான்... அன்பு அதிகமானால் வம்பும் தானே அதிகமாகும்... அதனால் நீங்கள் உங்கள் காதலை அளவு கடந்து காட்டுவீர்கள் மற்றவரும் உங்கள் மீது அளவு கடந்த காதலை காட்டுவார்கள்...
உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையின் சுவாரசியமான பகுதியே நீங்கள் வாழ்ந்த அந்த காதலின் காலகட்டம் தான்... அளவு கடந்து நேசிப்பதால் யாரை விட்டு யார் பிரிய முடியும்? உங்களை விட்டு உங்கள் துணைவர் எப்படி பிரிய முடியும்... உங்களை சுற்றி இருப்பார்கள் சிலர் உங்களிடம் அவர்களுடைய காதலை சொல்லுவார்கள் பலர் சொல்லாமலேயே இருப்பார்கள்... சொன்ன காதலை விட கன்னி ராசிக்கு சொல்லாமல் போன காதலியே அதிகம்... அதைப்பற்றி வாழ்க்கை முழுவதும் சிந்தித்து சிந்தித்து எண்ணத்திலேயே அசை போடுவீர்கள்...
நல்ல அறிவுரை கூறும் வாழ்க்கைத் துணைவர் தான் உங்களுக்கு அமைவார்கள்... நீங்கள் வாழ்க்கையை ஜாலியாக நகர்த்தலாம் என்று நினைத்தால் கூட குடும்பத்தை பற்றி... எதிர்காலத்தைப் பற்றி.... வாழ்க்கை பற்றி நினைக்கும் ஒரு அருமையான வாழ்க்கை துணை உங்களுக்கு அமையும்... நீங்கள் கொடுக்கும் அந்த காதலை வாழ்க்கையின் இறுதிவரையில் சுமக்கும் வாழ்க்கை துணை தான் அமையும்...
ஆண் /பெண் இரு கன்னி ராசி அன்பர்களுக்கும் அவருடைய எதிர் தரப்பினர் சுற்றி சுற்றி வருவார்கள்... யார் உங்களிடம் முதலில் பேசுவது யார் உங்களை தொடர்பு கொள்வது... யார் முதலில் காதலை வெளிப்படுத்துவது என்ற போட்டியிலேயே இருக்க நேரிடும்... பெருமாள் வழிபாடு உங்களுக்கு சிறந்த காதல் வாழ்க்கையை தேர்ந்தெடுக்க உதவி செய்வார்... வாழ்க்கை முழுவதும் அன்பையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் உங்களுக்கு சில நேரங்களில் வம்புகள் வழக்குகள் வரலாம் ஆனால் அவை அனைத்தும் ஒரு பாடமாகவே உங்களுக்கு அமையும்... இறுதி வரையில் கண்கள் இல்லாமல் உங்கள் வாழ்க்கை துணை காப்பாற்றும் உங்களுக்கு அதே போல உங்களைக் காப்பாற்றும் வாழ்க்கை துணையே அமைவார்...
பொறுமையாக இருப்பீர்கள் அதுவே உங்கள் பலம் பலவீனம்... மிகுந்த பொறுமையாக இருந்தால் கூட சற்று கடினமான பாதைகளில் அழுகுரலோடு பயணிக்க நேரிடும்... விரும்பிய வரை பிரிந்து இருந்தால் ஆஞ்சநேயர் வழிபாடு உங்களை அவர்களிடம் சேர்த்து வைக்கும்... ஸ்ரீ ராமர் எப்படி சீதையை பிரிந்து இருந்த சமயத்தில் சீதாப்பிராட்டி சந்தித்து ராமர் குறித்து தகவலை எடுத்துக் கூறி தாயாரின் முகத்தில் மகிழ்ச்சி வர வைத்தாரோ அதேபோல பிரிந்து இருந்தால் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஏதோ ஒரு மூலையில் ஆஞ்சநேயர் புன்னகையை வரவழைத்து உங்களிடம் சேர்த்து வைப்பார்...
குடும்பத்தோடு அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணத்தை வைத்திருக்கும் உங்களுக்கு... தனியாக குடும்பத்தைப் பிரிந்து வாழ்க்கை துணையோடு வாழ நேரிடலாம்... அப்படியான சமயத்தில் பரிபூரண அன்பையும் ஆதரவையும் உங்கள் இருவரை தவிர வேறு யார் கொடுக்க முடியும்... கன்னி ராசி அன்பர்களே இளம் வயதிலேயே கஷ்டங்களை சந்தித்து மத்தியமா வயதில் வாழ்க்கைத் துணையின் ஆதரவோடு படிப்படியாக வளர்ச்சியில் மேலே முன்னே வருவீர்கள் கவலை வேண்டாம் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்...