புத்தாண்டை வரவேற்க தயாரிக்கும் பிரம்மாண்ட கேக்


புதுச்சேரியில் உள்ள நட்சத்திர உணவகங்களில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விடுமுறையை கருத்தில் கொண்டும், புத்தாண்டை வரவேற்கவும் கேக் தயாரிக்கும் பணி நவம்பரில் மும்முரமாக நடைபெறும். 45 நாட்கள் ஊற வைக்கப்பட்டு கேக் தயாரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் வழங்குவதை நட்சத்திர உணவகங்கள் வழக்கமாக கொண்டுள்ளன.




இந்த ஆண்டிற்க்கான கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்க பழக்கலவை ஊறவைக்கும் விழா பாரம்பரிய முறைப்படி பழ வகைகளில் மதுபானங்களை ஊற்றி ஊறல் போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஒரு நட்சத்திர உணவகத்தில் நடந்த நிகழ்வில், 150 கிலோ அளவிலான பழ வகை கள், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் இதற்கு பயன்படுத்தப்பட்டன. இதனுடன் 25 லிட்டர் மதுபானங்களும் கலந்து ஊற வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் சுற்றுலாப் பயணிகளும் ஆர்வடன் பங்கேற்றனர். தயாரிப்பு பணியில் ஈடுபட்ட நட்சத்திர உணவகத்தின் உணவு தயாரிப்பாளர் கூறுகையில், 10 ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். இம்முறை 260 கிலோ கேக் தயாராகும்.




பாதம், முந்திரி, பிஸ்தா ஆகியவை கொண்டு ஊறவைத்து அதில் ஒயின் சேர்த்து தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளோம். கிறிஸ்துமஸ், புத்தாண்டை வரவேற்கவே இப்படி தயார் செய்கிறோம். வெளி நாடுகளில் பிரபலமாக உள்ள இந்நிகழ்வு தற்போது புதுச்சேரியிலும் கடந்த 11 ஆண்டுகளாக மேம்பட்டு வருகிறது என்றார்.




முதல் முறையாக இந்தக் கேக் தயாரிக்கும் நிகழ்வில் பங்கேற்றோர் கூறுகையில், கேக் தயாரிக்க பாதாம், முந்திரி, பிஸ்தாவை சேர்த்து பின்னர் ஒயின் சேர்த்து ஊறவைத்து தயாரிக்கும் நிகழ்வை முதல் முறையாக பார்க்கும் போது வியப்பாக உள்ளது. விடுமுறை காலமும், புத்தாண்டு வருகையும் இப்போதே கண்ணில் நிற்கிறது. இந்த அனுபவம் அலாதியானது என்றனர் மகிழ்ச்சியுடன்.


புத்தாண்டு


கிரிகோரியன் நாட்காட்டியில், புத்தாண்டு மாலை (பல நாடுகளில் பழைய ஆண்டு நாள் அல்லது செயிண்ட் சில்வெஸ்டர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது), ஆண்டின் கடைசி நாள் டிசம்பர் 31 அன்று அனுசரிக்கப்படுகிறது பல நாடுகளில், புத்தாண்டு கொண்டாட்டம் மாலை விருந்துகளில் கொண்டாடப்படுகிறது, அங்கு பலர் நடனமாடியும், விருந்துண்டும், பானங்களைக் குடித்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடுகிறார்கள். சில கிறிஸ்தவர்கள் கண்காணிப்பு சேவையில் கலந்து கொள்கிறார்கள் . கொண்டாட்டங்கள் பொதுவாக நள்ளிரவில் தொடங்கி புத்தாண்டு தினமான ஜனவரி 1 வரை செல்கின்றன.


சர்வதேச சுற்றுலா நகரமான புதுச்சேரி கொண்டாட்டத்திற்கு பெயர் போனது. அதுவும் புத்தாண்டு கொண்டாட்டம் என்றால் களைகட்டும். அந்தவகையில் 2025-ஐ வரவேற்கும் வகையில் புதுச்சேரியில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.




புதுச்சேரியின் புராதன கடற்கரை 3 கி.மீட்டர் நீளமுள்ளது. கரையில் இருந்து கண்கள் தொடும் அளவிற்கு கடல் அலைகள் வந்து செல்லும் கடற்கரையில் புத்தாண்டு கொண்ட்டாட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். பல்வேறு விடுதிகள் மற்றும் தனியார் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் சரியாக 12மணிக்கு புத்தாண்டு கொண்டாட கடற்கரைக்கு வந்து விடுவார்கள். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பல்வேறு கெடுபிடிகளை தாண்டி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாவினர்கள் புத்தாண்டை கொண்டாடினர். அதே போல் இந்தாண்டும் மேலும் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.