தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் துவக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.  கோடைக்காலம் ஆரம்பித்து விட்டாலே வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருக்கும் என்பதால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை என மக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருவர். குறிப்பாக கோடைக்காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. வெயிலில் வெளியில் செல்வோருக்கு உடம்பில் உள்ள நீர்சத்து குறைவதால் தாகம் எடுத்துக்கொண்டே இருக்கும். வெயிலில் நடமாடுவோர், உடல் சூட்டை தணிக்கும் வகையில், இளநீர், நீர்மோர், தர்ப்பூசணி, கிர்ணி பழ ஜூஸ் உள்ளிட்டவைகளை வாங்கி பருகுகின்றனர். 


இந்த நிலையில் புதுச்சேரியில் கோடை காலத்தில் பீர் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடை வெப்பம் காரணமாக மதுப்பிரியர்கள் தற்போது பீரையே அதிக அளவில் விரும்புவதாகவும், பிற மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் பீர் மட்டுமே வாங்கிச் செல்வதாகவும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், புதுச்சேரியில் தற்போது பீர் விற்பனை 40% அதிகரித்துள்ளது. அங்கு வழக்கமாக ஒரு மாதத்திற்கு 2 லட்சம் பெட்டிகள் பீர் விற்பனையாகி வந்த நிலையில், தற்போது 2.5 லட்சம் பெட்டிகள் பீர் விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலை தவிர்க்க அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளனர்.




 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண