புதுச்சேரி: முதலமைச்சரை சந்தித்து முறையிட காவலர்கள் அனுமதிக்காததால் சுயேட்சை எம்.எல்.ஏ கேட் மீது ஏறி குதித்து சென்று முதலமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் கலந்து கொண்ட விழாவில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை வசைபாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி இன்று காலை தலைமை செயலகத்தை முற்றுகையிட சென்ற முதல்வரின் ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ நேரு, தலைமை செயலாளர் அங்கு இல்லாததால் திரும்பி வந்தவர். கம்பன் கலையரங்கில் நடந்த சர்வதேச சுற்றுச்சூழல் தினவிழாவில் முதலமைச்சர் மற்றும் தலைமை செயலாளர் பங்கேற்று இருப்பதாக தகவல் கிடைக்க அங்கே சென்றார் சுயேட்சை எம்.எல்.ஏ நேரு, ஆனால் வாயிற்கதவை மூடிய போலீசார் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
இதனையடுத்து 8 அடி உயரமுள்ள வாசற்கதவின் மீது ஏறி குதித்து அரங்கிற்குள் சென்ற எம்.எல்.ஏ மேடைக்கு கிழ் இருந்தே முதல்வருடன் மேடையில் அமர்ந்திருந்த தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை கடுமையான வார்த்தைகளால் வசைபாடினார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொடுத்த நிதியை கொண்டு நகரை சுத்தம் செய்யாமல், சுற்றுச்சூழல் விழாவில் கலந்து என்ன பயன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அரங்கமே பரபரப்பு ஏற்பட்டது, இதனையடுத்து ஆவேசப்பட்ட நேரு எம்.எல்.ஏ வை அங்கிருந்த விழா ஏற்பாட்டாளர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்