தமிழர்கள் கொண்டாடும் தைத் திருநாள், அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் தேதியன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாள் எனவும் போற்றப்படும் தைப்பொங்கல் அன்று புது நெல்லை குத்தி அரிசி எடுத்து பொங்கலிடுவது பாரம்பரியமாக நடந்து வந்ததாகும். அதன்படி வாழையடி வாழையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.


போகியுடன் தொடங்கி பொங்கல், மாட்டுப் பொங்கல், 17-ந் தேதி காணும் பொங்கல் என 4 நாட்கள் தமிழர்களின் பாரம்பரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம், புதுச்சேரி அரசுகள் சார்பில் 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த பொங்கல் பண்டிகையை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர். கடைவீதிகளில் கூட்டம் நாடு முழுவதும் உள்ள தமிழர்கள், வெளிநாடு வாழ் தமிழர்களின் வீடுகளில் பழமை மாறாமல் வீடுகளில் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக உற்சாகம் இழந்த இந்த பொங்கல் விழா தற்போது எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலையில் பொதுமக்களால் களை கட்டியுள்ளது.


அதாவது பச்சரிசி, வெல்லம், கரும்பு, மஞ்சள் கொல்லை, பொங்கல் பானை, புத்தாடை என பொருட்கள் வாங்குவதற்கு புதுச்சேரியில் உள்ள கடை வீதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மக்கள் கூட்டம் அலை மோதியது.  உழவர்சந்தை, பெரிய மார்க்கெட், நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, வழுதாவூர் ரோடு, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் கரும்புகள் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.


பொருட்கள் வாங்க வந்தவர்களால் இன்று காலை முதல் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் போக்குவரத்தை சீரமைத்து வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை மட்டும் காந்திவீதியில் இயங்கும் சண்டே மார்க்கெட் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 4 நாட்களாக செயல்பட்டு வருகிறது. இங்கும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.



நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாட்டுப் பொங்கல், அடுத்த நாள் (செவ்வாய் கிழமை) காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்வார்கள். எந்த கட்டுப்பாடுகளும் இல்லாததால் கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுப்பார்கள் என்பதால் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புதுச்சேரியில் கடற்கரை மற்றும் சுற்றுலா தலங்களில் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.