வெள்ளியணை குளத்திற்கு திறக்கப்படும் தண்ணீரை முறைப்படுத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கரூர் அருகே, வெள்ளியணை குளத்திற்கு குடகனாற்றில் இருந்து திறந்து விடப்படும் நீரை, முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளியணையில் சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரியக்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்திற்கு குடகனாறு பாயும் அழகாபுரி நீர்த்தேக்கத்தில் இருந்து, கால்வாய் மூலம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.


 




 


திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மற்றும் குடகனாறு நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை கொட்டிய காரணத்தால், அழகாபுரி நீர்த்தேக்கம் நிறைந்துள்ளது. இந்நிலையில், அழகாபுரி நீர் தேக்கத்தில் இருந்து, ஒரு பகுதி நீரை வெள்ளியணை குளத்திற்கு பொதுப்பணி துறையினர் திறந்து விட்டனர். இந்நிலையில் குளத்திற்கு நீர் வரும் பாதைகள் சரியாக தூர்வராக காரணத்தாலும், வாய்க்கால் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது தரிசு நிலங்களுக்கு தண்ணீரை வெட்டி விடுவதால், வாய்க்காலில் வரும் தண்ணீர் முறையாக வருவது இல்லை. எனவே, இது தொடர்பாக கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி, குளத்திற்கு வரும் தண்ணீர் முழுமையாக வந்து சேர வேண்டும்.


 




 


வெள்ளியணை குளத்தை தூர்வாராமல் இருப்பதாகவும், அங்கு மக்கள் அதிகமாக குப்பை கொட்டும் காரணத்தாலும், நீர் மாசடைகிறது. இப்படி மாசடைந்ததால் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு குடிநீர் இல்லாமல் தவிக்கின்றனர். வெள்ளியணை பகுதியில் குளங்களில் கருவேலஞ்செடி முளைத்திருப்பதால் அங்கு தண்ணீரும் வருவதில்லை. அப்படி அங்கு தண்ணீர் வந்தாலும் அதில் பயனில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். வெள்ளியணையில் உள்ள குளங்களில் முட்செடிகள் மற்றும் பல வகையான செடிகள் வளர்ந்து இருப்பதால் அங்கு தண்ணீர் வந்தும் பயனில்லாமல் இருக்கின்றனர். ஒரு சில சமயத்தில் தண்ணீர் அங்கு வருவதே இல்லை. அப்படி வந்தால், வரும் பொழுதே பாதியில் விவசாயிகள் வரப்பு வெட்டி தரிசு நிலத்திற்கு எடுத்துக் கொள்கின்றனர்.


 





 


தண்ணீர் விவசாய நிலத்திற்கு போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் வேதனையில் உள்ளனர். வெள்ளியணை குளத்திற்கு தண்ணீர் வந்தால் தான், அதனைச் சுற்றியுள்ள ஐந்து ஒன்றியத்தைச் சேர்ந்த 40 ஆயிரத்திற்கும் அதிகமான தரிசு நிலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களுக்கு தண்ணீர் சென்றடையும். இல்லாவிடில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியடைவர். அங்கு ஏராளமான வீடுகள் உள்ளது. அதில் வசிக்கும் பொதுமக்கள் இப்போது தண்ணீர் தட்டுப்பாட்டால் மிகவும் வேதனையில் உள்ளனர். எனவே, பொதுமக்கள் விவசாயிகள் கலெக்டர் மற்றும் அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வெள்ளியணை குளம் ஒருமுறை நிரம்பினால் தான்தோன்றிமலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், தோகைமலை சுற்றியுள்ள 5 ஒன்றியத்தை சேர்ந்த 40 ஆயிரத்திற்கும் அதிகமான தரிசு நிலம் பாசன வசதி பெறும். எனவே, மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.எல்.ஏ சிவகாமசுந்தரி, கலெக்டர் பிரபுசங்கர் ஆகியோர், தீவிர முயற்சி எடுத்து தண்ணீர் முழுமையாக வந்து சேர்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.