தமிழகத்தில் முதன் முறையாக கரூர் மாவட்டத்தில் மனு அளிக்க வருபவர்களை இருக்கையில் அமர வைத்து மனு பெறும் நடைமுறையை கரூரில் செயல்படுத்தி இருப்பதாக ஆட்சியர் பிரபு சங்கர் பேட்டியளித்துள்ளார்.


 




சென்ற வாரம் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு மற்றும் அனைத்து அலுவலகங்களிலும் குறைகளை தீர்ப்பதற்காக, குறைதீர்க்க வேண்டி வரக்கூடிய பொது மக்களை உரிய மரியாதை உடன் நடத்தி அவர்களுக்கு உரிய இருக்கை வசதி செய்து கொடுத்து யாரும் நிற்காத வண்ணம், அவர்களை நிற்க வைத்து மனுக்களை பெற வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தினார்கள். அதனடிப்படையில்  கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறக் கூடிய மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் அவர்களிடம் உட்கார்ந்து கொண்டு மனுக்களை பெறக்கூடிய நடைமுறைகளை  துவக்கப்பட்டுள்ளது. வருகை தந்த பொதுமக்களுக்கு இருக்கைகள் போடப்பட்டு, அவர்களை அமர வைத்து அவர்களுக்கு மனுக்களை பெற்று கோரிக்கைகளை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவுகளை பிறப்பித்தனர். 


 




அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் பிரபு சங்கர், ”முதன்முதலாக தமிழ்நாட்டில் இதை நாம் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையினை நிறைவேற்றியுள்ளோம். அதுமட்டுமின்றி பொதுமக்கள் வரிசையில் கூட நிற்கா வண்ணம் அவர்களுக்கு தேவையான இருக்கை வசதிகளை செய்து கொடுத்து பகுதி பகுதியாக அவர்களின் மனுக்களை பெறக்கூடிய முறையை நாம்   அமல்படுத்தியுள்ளோம். இதன் மூலம் குறைத்து இருக்கும் வரக்கூடிய பொதுமக்களின் தன்மானத்தை காப்பதோடும் கனிவுடன் அவர்களுடைய உரைகளை உட்கார்ந்து கேட்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவினை நிறைவேற்றி உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


 




 


தொடர்ந்து பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்களுடைய கோரிக்கை  உட்கார்ந்து வண்ணம் குறைகளை தெரிவித்துள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே கரூர் மாவட்ட நிர்வாகத்தில் நாம் சாய்தள வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு எப்பொழுதும் நாங்கள் அமர வைத்து தான் மனுக்களை வாங்கிக் கொண்டிருக்கின்றோம் அதேபோல் அவர்களுக்கு கொட்டகை குடிநீர் வசதி அதே போல் அமர வைத்து தான் கோரிக்கை மனுக்களை பதிவு செய்து வழங்கும். அதிக அளவில் மக்கள் வந்தாலும் அவர்களுக்கு வரிசையில் கூட நிற்காத வண்ணம் இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம். மனு வழங்கும் போது கூட உட்கார்ந்து கொடுக்க உள்ள வசதி தொடங்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் இதே நிலையில் தான் மனுக்கள் பெறப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.