PM Modi Traffic Change:  பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை தர உள்ளார்.


பிரதமர் மோடி தமிழகம் வருகை:


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி தொடர்பாக விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டும் நிலையில், குறிப்பாக தமிழகத்தில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் எம்.பிக்களை பெற கவனம் செலுத்தி வருகிறது. இதன் விளைவாகவே நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக இன்று பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அவரது இரண்டு நாள் பயணத்த ஒட்டி பல்லடம், கோவை மற்றும் மதுரையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.


கோவையில் போக்குவரத்து மாற்றம்:


கேரளாவில் இருந்து கோவைக்கு தான் முதலில் பிரதமர் மோடி இன்று வருகை தருகிறார். இதையொட்டி கோவை சூலூரில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக  கனரக வாகனங்களுக்கு மட்டும் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



  • 1) பாலக்காட்டிலிருந்து வாளையார் வழியாக வரும் தாராபுரம், திருச்சி செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் மதுக்கரை, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும்.

  • கோவை மாநகருக்குள் இருந்து வரும் கனரக வாகனங்கள் சுங்கம் வழியாக பொள்ளாச்சி சாலை, ஈச்சனாரி, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும்.

  • கோவை மாநகர் சிங்காநல்லூரில் இருந்து திருச்சி சாலையில் வரும் கனரக வாகனங்கள் சிந்தாமணிபுதூர் நான்கு ரோடு சந்திப்பு, L&T Bye-pass, பட்டணம் பிரிவு, G-Square, கற்பகம் கல்லூரி சந்திப்பு, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும்.

  • கோவை சிங்காநல்லூரில் இருந்து திருச்சி சாலையில் வரும் கனரக வாகனங்கள் சிந்தாமணிபுதூர் நான்கு ரோடு சந்திப்பு, நீலாம்பூர், அவினாசி சாலை, கருமத்தம்பட்டி, அவினாசி வழியே செல்ல வேண்டும்.

  • பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் செல்லும் கனரக வாகனங்கள் உடுமலைப்பேட்டை, தாராபுரம் வழியே செல்ல வேண்டும்.

  • கருமத்தம்பட்டியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் சூலூர் வழியில் செல்வதற்கு அனுமதி இல்லை. நீலாம்பூர், சிந்தாமணிபுதூர் சந்திப்பு, கற்பகம் கல்லூரி சந்திப்பு, பொள்ளாச்சி வழியே செல்ல அனுமதிக்கப்படும்.


பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்:



  • பல்லடம் வழியாக கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள், சரக்கு லாரிகள், நீலாம்பூர், கருமத்தம்பட்டி, அவினாசி வழியாக செல்ல வேண்டும்.

  • கோவையில் இருந்து பல்லடம் வழியாக மதுரை வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் ஈச்சனாரி நால்ரோடு, பொள்ளாச்சி, உடுமலை வழியாக செல்ல வேண்டும்.

  • திருச்சி மற்றும் கரூரில் இருந்து பல்லடம் வழியாக கோவை மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் கொடுமுடி, கணபதிபாளையம், பெருந்துறை, அவினாசி வழியாக செல்ல வேண்டும்.

  • திருச்சி மற்றும் கரூரில் இருந்து பல்லடம் வழியாக பொள்ளாச்சி, உடுமலை, கேரளா மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் தண்ணீர் பந்தல், சின்னதாராபுரம், மூலனூர், குடிமங்கலம், பொள்ளாச்சி, வழியாக செல்ல வேண்டும்.

  • பொள்ளாச்சி மற்றும் உடுமலையில் இருந்து பல்லடம் வழியாக திருப்பூர் மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் குடிமங்கலம் நால்ரோடு, தாராபுரம், அவினாசிபாளையம் வழியாக செல்ல வேண்டும்.

  • மதுரை மற்றும் திண்டுக்கல்லில் இருந்து தாராபுரம் வழியாக கோவை கேரளா மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி வழியாக செல்ல வேண்டும்.

  • கோவையில் இருந்து பல்லடம் வழியாக கரூர், திருச்சி மார்க்கமாக செல்லும் இலகு ரக வாகனங்கள் சூலூர், கரடிவாவி, காமநாயக்கன்பாளையம், கொடுவாய், காங்கயம், வெள்ளகோவில் வழியாக செல்ல வேண்டும்.

  • திருச்சி மற்றும் கரூரிலிருந்து பல்லடம் வழியாக கோவை மார்க்கமாக செல்லும் இலகுரக வாகனங்கள் காங்கயம், படியூர், திருப்பூர், அவினாசி வழியாக செல்ல வேண்டும்


மதுரையில் போக்குவரத்து மாற்றம்:


பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி மதுரையில் 2 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 



  • திருச்சியில் இருந்து மதுரை வரும் வாகனங்கள் ஒத்தக்கடை வழியாக மாட்டுத்தாவணி செல்லலாம். 

  • திருச்சியில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் ஒத்தக்கடை வழியாக செல்லும். 

  • சிவகங்கையில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் பூவந்தி வழியாக அந்தந்த மாவட்டங்களுக்கு சென்றடையும். 

  • ராமநாதபுரத்தில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் சாக்குடி பாலம் வழியாக சென்றடையும். 

  • தூத்துக்குடியில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் ஏ.முக்குளம் சந்திப்பு வழியாக சென்றடையும்.