கச்சா எண்ணெய் விலை


ரஷ்யா - உக்ரைன் பிரச்சனைக்கு பிறகு கச்சா எண்ணெய் விலையில் கடும் தாக்கம் இருந்தது. இதனால் மேற்கத்திய நாடுகள் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை வைத்து ரஷ்யாவை முடக்க நினைத்தன. இன்று வரையில் பல நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்திருந்தாலும், ரஷ்யா இன்னும் அசராத ஒரு எண்ணெய் உற்பத்தியாளராக இருந்து வருகின்றது.


இந்நிலையில் கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் குறைந்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது கூறப்படுகிறது. பெருமளவில் எண்ணெய்யை ஈராக், அரேபியா, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்குகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருவதன் காரணமாக சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.


பெட்ரோல், டீசல் விலை


இதனை தொடர்ந்து, தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 8 ரூபாய்க்கும், டீசல் விலை 6 ரூபாய்க்கும் கலால் வரி குறைப்பால் இறக்கம் கண்டது. இந்நிலையில் மாற்றம் செய்யப்பட்ட பெட்ரோல், டீசல் விலை 200வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி இன்று (டிசம்பர் 7 ஆம் தேதி) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. முன்னதாக எரிபொருள் விலை உயர்வால் பால், டீ, காய்கறிகள், இதர உணவுப் பொருள்களின் விலை ஏறியிருந்தது. தற்போது கிட்டதட்ட விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை 200வது நாளை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


"இந்தியாவில் குறைந்தாக தெரியவில்லை ?"






இந்நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து இருந்தாலும், அதன் மூலம் வரும் பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் குறையாதது போல் தெரிகிறது” என்றார்.


மேலும் கச்சா எண்ணெய் விலை குறைப்பில் ஒப்பிடும் போது பெட்ரோல் டீசல் விலை குறையாமல் இருக்கிறது.  பெட்ரோல், டீசல் வேறு எது மூலம் எடுக்கப்படுகிறது என்றும்  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.


 




மேலும் படிக்க


Petrol Diesel Price: தொடர்ந்து 200வது நாள்! இன்றைய பெட்ரோல் விலை நிலவரம் இதுதான்..!