தமிழக அரசு மே, ஜூன் ஆகிய  2 மாதங்களில் 4,600 கோடி ரூபாய்க்கு  தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி 4 சதவிகித கமிஷனாக 220 கோடி பெற்றுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்துள்ளார்.


கரூரில் மின்கட்டண உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். தமிழகத்தில்  , மின் கட்டணம் உயர்வைக்  கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கரூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.


மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த  கடிதம் எழுதியுள்ளதாக செந்தில்பாலாஜி கூறுகிறார்.  அந்த கடிதத்தை செந்தில்பாலாஜி காட்ட வேண்டும். கருணாநிதியை தூக்கி சாப்பிடும் அளவுக்கு  செந்தில்பாலாஜி ஊழல் செய்கிறார். மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் 20 சதவிகித கமிஷன் பெறுகிறார்கள். தமிழகத்தில் அதிகம் பொய் சொல்லும் போட்டி வைத்தால் முதல்வர் முதல் இடத்திலும்,  அமைச்சர் செந்தில்பாலாஜி இரண்டாம் இடத்திலும் இருப்பார்.



தமிழகத்தில் மின் உற்பத்தி திறனை அரசு குறைத்து தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கி கமிஷன் பெறுகிறார்கள். மே, ஜூன் 2 மாதங்களில் 4,600 கோடிக்கு தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி 4 சதவிகித கமிஷன் 220 கோடி, 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 54 சதவிகிதம் கட்டணம் உயருகிறது. மின் துறை அமைச்சர்  செந்தில்பாலாஜி ஒவ்வொரு மாதமும் ஒரு பொய் சொல்கிறார். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில்  492 கோடிக்கு நிலக்கரி தமிழகத்தில் வாங்கப்பட்டுள்ளது. பணத்தை வைத்து ஜனநாயகத்தை விலை பேசும் அரசியல்வாதி தமிழகத்தில் இருக்கக் கூடாது. அப்படி நடந்தால் தமிழகத்தில் ஏழைகளை அப்புறப்படுத்த முடியாது. 5 கட்சிக்கு சென்ற செந்தில்பாலாஜி 6-வது கட்சிக்கு செல்வதற்கு முன் ஊழல் வழக்கில் சிறை செல்லும் நிலை ஏற்படும் என பேசினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண