திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கமும், மதுரை ஆய்வு வட்டமும் இணைந்து நடத்திய காலனியமும் தமிழ் மறுமலர்ச்சியும் எனும் கருத்தரங்கம் நேற்று மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரியில் நடைபெற்றது.


இந்த நிகழ்விற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி முதல்வர் முனைவர். ம. புவனேஸ்வரன் தலைமை தாங்கினார். மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் பிரவீன் குமார் வரவேற்புரை வழங்கினார்.



"திராவிடமும் தமிழும் வெவ்வேறல்ல"


திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் தேன்மொழி முத்துராமலிங்கம் தமது வாழ்த்துரையில் இந்திய வரலாற்றில் நிகழ்ந்த கருத்துமுதல் வாதத்திற்கு எதிரான பொருள்முதல்வாதப் போராட்டத்தின் தொடர்ச்சிதான் திராவிடம் என்பதனைப் பதிவு செய்தார்.


திராவிடம் = தமிழ் என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய பேராசிரியர் வீ . அரசு, "திராவிடமும் தமிழும் வெவ்வேறல்ல. திராவிடத்தையும் தமிழையும் வேறுபடுத்தி பேசுபவர்களின் நோக்கம் அற்பத்தனமாக இருக்கிறது. மார்க்சியர்களாலும் தமிழ்த் தேசியவாதிகளாலும் கூட திராவிடத்தின் இயக்கவியலைப் புரிந்து கொள்ள முடியவில்லை.


பேராசிரியர் பகிர்ந்த முக்கிய தகவல்கள்:


தமிழும் திராவிடமும் ஒரு மொழியைக் குறித்த இருவேறு சொற்கள். 19 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற பகுத்தறிவுச் செயல்பாடுகள் முந்தைய ஆயிரம் ஆண்டுகள் கற்பிதங்களை தலைகீழாக்கியது. 20 நூற்றாண்டில் சனாதானத்திற்கு எதிரான போராட்டத்தை பெரியாரும் அம்பேத்கரும் முன் நின்று நிகழ்த்தினார்கள்.




ஒரு சொல்லை வைத்து விளையாடக்கூடிய விளையாட்டுகள் நமக்குத் தேவையில்லை" என்று உரையாற்றினார். முனைவர் க.சி. பழனிக்குமார், குமரன் ஆகியோர், அத்திப்பாக்கம் வெங்கடாசலனாரும் அயோத்திதாசாரும் காலனியத்தை சுதேசிகளுக்கு எதிரான சுதேசிகளாக எதிர்கொண்டது குறித்தும் ந. கோவிந்தராசனின் காலனிய ஆய்வுகள் குறித்தும் உரையாற்றினர்.


இதையும் படிக்க: Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி ஈவி வரை, இவ்வளவா?