மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் வணிகவியக் துறை மாணவியான சே.பிரியதர்ஷினி, யோகாவில் ஆசிய அளவில் புதிய சாதனையை படைத்திருக்கிறார். கடற்கன்னி வடிவில் அமர்ந்து செய்யப்படும் ஏக பாத ராஜபோதாசனம் என்னும் யோகாசன நிலையில் தொடர்ந்து 60 நிமிடங்கள் இருந்ததன் மூலம் தற்போது அவர் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைப்புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.
ஏக பாத ராஜகபோதாசனம் என்கிற இந்த ஆசன நிலையில், கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி நந்தினி சார்தா 51 நிமிடங்கள் 58 வினாடிகள் நேரம் அமர்ந்து நிகழ்த்தியதே முந்தைய சாதனையாக இருந்தது. அதைத் தொடர்ந்து, மாணவி பிரியதர்ஷினி முழுமையாக 60 நிமிடங்கள் அந்த ஆசன நிலையில் அமர்ந்து நீடித்ததன் மூலம், இந்த புதிய சாதனையை படைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த அன்று மகளிர் தினத்தையொட்டி (08.03.2022) மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக்கல்லூரி அரங்கத்தில் இந்த சாதனையை அவர் படைத்தார். இந்த நிகழ்வில், மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆய்வு நிலையத்தின் வேந்தரான ஏ.என். ராதாகிருஷ்ணன், கல்லூரித் தலைவர் ஜெயந்தி ராதா கிருஷ்ணன், துணை வேந்தர் முனைவர் ஆர்.எஸ். நீலகண்டன், பதிவாளர் முனைவர் சி.கிருத்திகா, மீனாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வி.சாந்தி ஆகியோருடன் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பின் நடிவர் முன்னிலையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
பலர் முன்னிலையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
யோகரத்னா சரஸ்வதி மூன்றாண்டுகளாக, மிகவும் சிரத்தையோடு யோகா பயிற்சி பயின்று வந்தார். தனது ஆசிரியை போல இவரும் யோகரத்னா பட்டம் பெற்றவரே.. தற்போது மீனாட்சி கல்லூரியில் மூன்றாம் ஆண்டும் வணிகவியல் பயின்று வரும் அவர், படிப்பிலும் சிறந்த மாணவியாக இருக்கிறார். தம் கல்லூரி முதல்வர் முனைவர் சாந்தி, துறைத்தலைவர் முனைவர் ச.மலர்விழி ஆகியோர் அளித்த ஊக்கமும் மெகர் பல்கலை கழக நிர்வாகம் வழங்கிய நன்கொடை மற்றும் அனைத்து வகை உதவிகளுமே இந்த சாதனையை நிகழ்த்த காரணமாக அமைந்தது என்று கூறும் பிரியதர்ஷினி.இந்தச் சாதனைக்கு உறுதுணையாக இருந்த கல்லூரி நிர்வாகத்திற்கு தனது நன்றியை தெரிவித்தார். யோகா ஆசிரியர் சரஸ்வதி, தந்தை சேகர், தாய் அனிதா ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்த தூண்டுகோலாய் இருந்ததாகவும் சரஸ்வதி கூறினார்.