காஞ்சிபுரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில், பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் மேளா (PM National Apprenticeship Mela (PMNAM), காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தகவல் வெளியாகி உள்ளது.

Continues below advertisement

பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் மேளா - (PM National Apprenticeship Mela (PMNAM)

10.11.2025 திங்கட் கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஒரகடம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழிற் பிரிவுகளை சார்ந்த பயிற்சியாளர்களுக்கு பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் மேளா (PM National Apprenticeship Mela (PMNAM)) மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் (Industry Clusters) கொண்டு நடத்தப்படுகின்றது. 

தொழிற்பழகுநர் பயிற்சி

 

Continues below advertisement

இம்முகாமில் தகுதியுடைய ITI தேர்ச்சிப் பெற்ற பயிற்சியாளர்கள், 8 ஆம் வகுப்பு வரை படித்த / இடைநின்ற, 10 ஆம் வகுப்பு வரை படித்த / இடைநின்ற மற்றும் 12ம் வகுப்பு வரை படித்த / இடைநின்ற மாணவர்களுக்கும் தொழிற்பழகுநர் பயிற்சியில் சேர்ந்து மத்திய அரசின் NAC (National Apprenticeship Certificate) சான்றிதழ் பெற்று பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது. 

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி 

மேலும் விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தெரிவித்துள்ளார்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண். 044-29894560.