PM Modi Chennai Visit: திமுக அரசு பொறுப்பேற்று முதன் முறையாக நாளை தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் நீட் தேர்வு விலக்கு தொடர்பான கோரிக்கை மனுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளிக்கவுள்ளார்.


ஏற்கனவே, டெல்லி சென்று பிரதமரை சந்தித்தப்போது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், ஆளுநர் நீட் விலக்கு சட்ட முன் வடிவை மத்திய அரசுக்கு அனுப்பியிருப்பதை குறிப்பிட்டு, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தவுள்ளார்.


நாளை தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திரமோடி சென்னையில் நடைபெறும் விழாவில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க இருக்கிறார். அதன்படி, நாளை மாலை 5.30 மணிக்கு ஹைதரபாத்தில் இருந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ் அடையாறு சென்று, அங்கிருந்து கார் மூலம் விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டரங்கம் வருகிறார்.




அங்கு 2,900 கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்து திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன், 28 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள 6 திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார்.


மதுரை – தேனி அகல ரயில் பாதை, தாம்பரம் – செங்கல்பட்டு மூன்றாவது ரயில் பாதை, எண்ணூர் – செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் – பெங்களூரு இடையே குழாய் வழியே இயற்கை எரிவாயு எடுத்து செல்லும் திட்டம் ஆகியவற்றை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.


மேலும், சென்னை பெரும்பாக்கத்தில் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1,152 வீடுகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பையும் திறந்து வைக்கும் பிரதமர் மோடி, சென்னை – பெங்களூரு விரைவு சாலை, சென்னை துறைமுகம் முதல் – மதுரவாயல் வரையிலான இரண்டு அடுக்கு உயர்மட்ட பாலம், ஓசூர் – தர்மபுரி, மீன்சுருட்டி – சிதம்பரம் நெடுஞ்சாலை பணிகள் ஆகியவற்றிற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், காட்பாடி, மதுரை, கன்னியாகுமரி ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டம், திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் அமையவிருக்கும் பன்முனை சரக்கு பூங்கா உள்ளிட்ட திட்டங்களுக்கும் பிரதமர் மோடி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.


இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடியோடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.


Also Read | PM Modi Chennai Visit Schedule: நாளை தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி... திட்டங்கள் என்னென்ன..?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்




பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண