உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி வருகை புரிந்தார். அப்போது பலத்த பாதுகாப்பு வாகன அணிவகுப்பில் பிரதமர் கார் மீனாட்சி அம்மன் கோவில் பகுதிக்கு வந்தடைந்தது.


தொடர்ந்து சாமி தரிசனம் செய்த பிரதமர் தங்கும் விடுதிக்கு புறப்பட்டு செல்லும் வழியில் மதுரை ஆதீனத்தை கண்டதும், அவரை அழைத்து அவரிடம் இருந்து அங்க வஸ்திரம் பெற்றார். அதன்பிறகு, வாகனத்தை மெதுவாக இயக்கியவாறு பொதுமக்களின் உற்சாக வரவேற்பை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.