கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த ஜூலை 12 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார்.மேலும் அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள், திமுக தொண்டர்கள், பிற அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரும் அவர் விரைவில் பூரண உடல் நலம் பெற வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே உடற்சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்ததால் தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்திருந்தார். இதனால் சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளுக்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரின் கொரோனா அறிகுறிகளை கண்காணிப்பதற்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி தொலைபேசி மூலம் அவரிடம் நலம் விசாரித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்