'வேற்றுமையில் ஒற்றுமை' தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் முர்மு!

இந்த பண்டிகைகள் நமது நாட்டின் வளர்ச்சிக்காக உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்ற நம்மை ஊக்குவிக்க வேண்டும் என தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு.

Continues below advertisement

தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். சூரிய பகவான் தனது பயணத்தை மேஷ ராசியில் இருந்து மீண்டும் துவங்குவதையே, தமிழ்ப்புத்தாண்டாக கருதி வருகிறோம்.

Continues below advertisement

இந்த நாள் தென்னிந்தியாவில் தமிழ் வருடப்பிறப்பு, சித்திரை பிறப்பு, சித்திரை விஷூ, சித்திரைக் கனி மற்றும் சங்கராந்தி என பல பெயர்களால் கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தமிழ் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வரும் ஏப்ரல் 13, 14, 15 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படும் வைசாகி, விஷு, பஹாக் பிஹு, பொய்லா போயிஷாக், மேஷாதி, வைஷாகடி மற்றும் தமிழ் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். 

"வேற்றுமையில் ஒற்றுமை"

அவர் வெளியிட்டிருக்கும் செய்தியில் கூறியிருப்பதாவது, “வைசாகி, விஷு, பஹாக் பிஹு, பொய்லா போயிஷாக், மேஷாதி, வைஷாகடி, புத்தாண்டு  பிறப்பு ஆகிய புனிதமான நாட்களில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அறுவடை நேரத்தில் கொண்டாடப்படும் இந்த பண்டிகைகள் நமது சமூக மரபுகளையும் வேற்றுமையில் ஒற்றுமையையும் குறிக்கின்றன. இந்தப் பண்டிகைகள் மூலம், நமது ‘அன்னதாதா’ விவசாயிகளின் கடின உழைப்பை மதிக்கிறோம். அவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த பண்டிகைகள் இயற்கையைப் பாதுகாப்பது,  நமது கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பது என்ற செய்தியையும் வழங்குகின்றன.

இந்த பண்டிகைகள் நமது நாட்டின் வளர்ச்சிக்காக உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்ற நம்மை ஊக்குவிக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

உத்தராயனம் - சிசிர ரிது - பங்குனி மாதம் - 31ம் தேதி - 13.04.2020 - அன்றைய தினம் சனிக்கிழமையும் - சுக்ல பக்ஷ சஷ்டியும் - மிருகசிரீஷ நக்ஷத்ரமும் - சோபன நாமயோகமும் - பாலவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு மணி 8.26க்கு சோபகிருது வருடம் முடிவடைந்து விருச்சிக லக்னத்தில் ஸ்ரீகுரோதி வருடம் பிறக்கிறது.

இதையும் படிக்க: TN Rain: இன்று இரவு 16 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை ரீசண்ட் அப்டேட்!

Continues below advertisement
Sponsored Links by Taboola