Tindivanam Power Shutdown: விழுப்புரம் மற்றும் திண்டிவனம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக நாளை 31-08-2024 அன்று கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.


விழுப்புரத்தில் மின் தடை இல்லை


விழுப்புரத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பராமரிப்பு பணிக்காக பல இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் முடிவு பெற்றதன் காரணமாக விழுப்புரத்தில் நாளை மின்வெட்டு இல்லை, மழை போன்ற இயற்கை பேரிடர்களால் சிறிது நேரம் மின்சாரம் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. 


திண்டிவனம் துணை மின் நிலையம் 


திண்டிவனம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.


மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்


திண்டிவனம் பகுதியில் உள்ள மரக்காணம் ரோடு, இந்திரா காந்தி நகர், நத்தை மேடு, பாண்டி ரோடு, பாண்டியன் நகர், நேதாஜி நகர், வகாப் நகர், ஜெயபுரம், நாகலாபுரம், எம் கே நகர், மயிலம் ரோடு, இந்திரா நகர், டி எம் ஆர் நகர், சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி வி நகர், கிடங்கல் 1, கிடங்கள் இரண்டு, கோட்டைமேடு, பூதேரி, நேரு வீதி, பூந்தோட்டம், கேடிஆர் நகர், புது மசூதி தெரு, மாரியம்மன் கோவில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.  மேலும் ஊழல் மின் நிலையத்தில் மின் தடை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.