Power loom: விசைத்தறி தொழிலாளர்களுக்கு அதிரடி ஆஃபர் வழங்கிய முதலமைச்சர்! 1000 யூனிட் மின்சாரம் இலவசம்

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 1000 யூனிட் இலவச மின்சாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

Continues below advertisement

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 700 யூனிட் இலவச மின்சாரம் இருந்த நிலையில் அதை 1000 யூனிட்டாக முதலமைச்சர் ஸ்டாலின் உயர்த்தி அறிவித்துள்ளார். 

Continues below advertisement

1000 யூனிட் இலவச மின்சாரம், மார்ச் 1 முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 700 யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், 1000 யூனிட்டாக உயர்த்தி முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

விசைத்தறி:

பருத்தி பஞ்சில் உள்ள கொட்டை எடுத்துப் பஞ்சாக்கி, அதை ஸ்பின்னிங் மில்லில் நூலாக்கி, அந்த மூலப்பொருளை ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத் தறியாளர்களுக்குக் கொடுக்கிறார்கள். தரப்படும் நூலைத் தரமிக்க, நேர்த்தியான வெண்மை அல்லது சாம்பல் வண்ணத் துணியாக நெய்வது கோவை, திருப்பூர் விசைத் தறியாளர்களின் பணியாக உள்ளது.

ஜவுளித் தொழிலுக்குப் பெயர்போன கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிக அளவிலான துணிகள் விசைத்தறிகள் மூலம் நெய்யப்படுகின்றன. குறிப்பாக கோவை அவினாசி, மங்கலம், சோமனூர், தெக்கலூர், காரணம்பேட்டை, திருப்பூர் பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசைத்தறித் தொழிலே அங்கு வசிப்போரின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. 

இந்நிலையில், விசைத்தறி தொழிலாளர்களுக்கு 700 யூனிட் இலவச மின்சாரத்தில் இருந்து 1000 யூனிட்டாக  உயர்த்தி வழங்கப்பட்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 1000 யூனிட் இலவச மின்சாரம், மார்ச் 1 முன்தேதியிட்டு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Continues below advertisement