CM Stalin - NEET : முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம்
Chief Minister Stalin- PG NEET :முதுநிலை மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது எண்ணற்ற மருத்துவர்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Postponement of PG NEET: இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீட் முதுநிலை தேர்வு ரத்து:
நடப்பாண்டுக்கான இளநிலை நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 23 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதனிடையே ஜூன் 4 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. முடிவுகள் வெளியானதில் இருந்து, தேர்வில் குளறுபடிகள் இருந்ததாக கூறி பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.இந்நிலையில் , யுஜிசி நெட் தேர்விலும் முறைகேடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது.
Just In




ஆனால் நீட் இளநிலை தேர்வு ரத்து செய்யப்படவில்லை. இந்நிலையில், இன்று நீட் முதுநிலை தேர்வானது நடைபெற இருந்த நிலையில், நேற்று ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது
முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்:
முதலமைச்சர் ஸ்டாலின் X தளத்தில் தெரிவித்ததாவது, UGC-NET ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, NEET-PG ரத்து செய்யப்பட்டது, ஆயிரக்கணக்கான மருத்துவர்களை ஆழ்ந்த விரக்தியில் தள்ளியுள்ளது. மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்காக திட்டமிட்டு இணைவோம்.
தொழில்முறை படிப்புகளுக்கான நியாயமான மற்றும் சமமான தேர்வு செயல்முறையை உருவாக்குவதற்கு, தொழில்முறை படிப்புகளுக்கான தேர்வு செயல்முறையைத் தீர்மானிக்க மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக, மிக முக்கியமாக மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் மனதில் நம்பிக்கையை மீண்டும் நிறுவுவதற்காக இணைவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.