Pongal Special Train: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை தாம்பரம் - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 


சிறப்பு ரயில்கள் இயக்கம்:


வரும் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15 தைப்பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 உழவர் திருநாள் என வரிசையாக விடுமுறை நாட்கள் வருகின்றன. எனவே, இந்த முறை சனிக்கிழமையன்றே விடுமுறை தொடங்கிவிடுவதால், 13 முதல் 17ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.


இதனால், ஜனவரி 12ஆம் தேதியே வெளியூருக்கு பயணமாக பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள்.  வழக்கமாக பண்டிகை நேரத்தில் பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் தமிழக போக்குவரதுது கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.  


அதேபோல, ரயில் டிக்கெட் முன்பதிவு கடந்த செப்டம்பரில் தொடங்கி விரைவாக முடிந்துவிட்டது. அதேபோல, வரும் 12 முதல் 18-ஆம் தேதி வரை பெரும்பாலான  ரயில்களில் டிக்கெட் முன்பதிவுகளும் முடிந்துவிட்டன. ரயில்களில் முன்பதிவு செய்ய முடியாத பொதுமக்கள், சிறப்பு ரயில்களை எதிர்பார்த்து காத்திருந்தனர்.


எந்தெந்த வழித்தடம்?


இந்த நிலையில், சென்னை தாம்பரம் - நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து நாளை, 13,16ஆம் தேதிகளில் நெல்லைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.  


வண்டி எண் (06003) தாம்பரத்தில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும் ரயில் விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி,  ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோயில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கில கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன் மகாதேவி வழியாக காலை 11.15 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. 


மறுமார்க்கத்தில் ஜனவரி 12,14,17ஆம் தேதிகளில் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் ரயில் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை வந்தடைகிறது. தாம்பரத்தில் இருந்து நெல்லை செல்லும் சிறப்பு ரயிலில் பயணிக்க இன்றில் இருந்து முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 


தூத்துக்குடிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்:


அதேபோல, சென்னை தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை தாம்பரத்தில் இருந்து ஜனவரி 14,16ஆம் தேதிகளில் சிறப்பு ரயில் தூத்துக்குடி செல்கிறது.  தாம்பரத்தில் காலை 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்  கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி வழியாக தூத்துக்குடிக்கு இரவு 10.45 மணிக்கு சென்றடைகிறது.  


மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து ஜனவரி 15,17ஆம்  தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


TN Bus Strike: போக்குவரத்து பணியாளர்கள் ஸ்ட்ரைக் - எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பேருந்துகள் இயக்கம்! முழு விபரம்