தமிழ்நாட்டில் தை மாதம் முதல் நாள்( ஜனவரி 14 ஆம் தேதி ) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பலரும் இந்த நன்னாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். கடந்த வருடம், தமிழ்நாடு அரசு சார்பில் ரேசன் அட்டை குடும்பத்தாருக்கு, ரூ. 1000 வழங்கப்பட்டது. ஆனால், இந்த வருடம், பொங்கலுக்கு பரிசுத் தொகையாக , தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 1000 வழங்கப்படவில்லை.


இதனால், எதிர்க்கட்சிகள் பலரும், பரிசுத் தொகை வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும் விமர்சித்தும் வருகின்றனர். 


மேலும், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ காளிமுத்து, இன்று நடைபெற்ற சடட்டப்பேரவை கூட்டத்தில் , ஏன் ரூ. 1000 வழங்கவில்லை என கேள்வி எழுப்பினார். 


அமைச்சர் தென்னரசு விளக்கம்:


இந்நிலையில், ஏன் பொங்கலுக்கு பரிசுத் தொகையாக ரூ. 1000 வழங்கவில்லை என்பது குறித்து சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். 


அவர் தெரிவித்துள்ளதாவது, “ மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கான நிதியை நிலுவை வைத்துள்ளதால், பொங்கல் பரிசு ரூ. 1000 வழங்க முடியவில்லை. தமிழ்நாட்டில் வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.37, 000 வழங்க கோரி கேட்டோம். ஆனால், மத்திய அரசு , வெறும் 1000 கோடி மட்டுமே விடுவித்துள்ளது. பொங்கல் தொகுப்புக்காக, தமிழ்நாடு அரசு ரூ. 280 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 


மேலும், சர்வ சிக்ஷா திட்டத்தில் பள்ளி கல்வித்துறைக்கு, இதுவரை  ரூ. 2, 155 கோடி விடுவிக்கவில்லை எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். 


பொங்கல் பரிசு:


கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியது போல, இந்த ஆண்டும் தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழு கரும்பு பொதுமக்களுக்கு அளிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.


பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து , தமிழ்நாடு அரசு தெரிவித்ததாவது, 




2025-ஆம் ஆண்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்கிட தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தநாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.


2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.