பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் - குடும்ப அட்டைத்தாரர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  த.பிரபுசங்கர் வழங்கினார்.


 


          

   


கரூர் காந்திகிராமம் தெற்கு நியாயவிலைக்கடையில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் ரூ.1000/- ரொக்கப்பணம் மற்றும் ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர்  வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகரட்சி மேயர் வெ.கவிதா, துணைமேயர் ப.சரவணன் கோயம்புத்தூர் மாவட்ட மத்தியக் கூ;ட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் இரா.இந்துமதி ஆகியோர் முன்னிலை  வகித்தார்கள்.


 




 


  பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைகிணங்க மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்தறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக மக்கள் அனைவரும் 2023 பொங்கல் பண்டிகையை சிறப்பாககொண்டாடும் வகையில், பொது விநியோகத் திட்டத்தின்கீழ் நியாய விலைக்கடைகளில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன் ரூ.1000/- ரொக்கப்பணம் மற்றும் ஒரு முழுக் கரும்பு ஆகியவற்றை வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் தகுதியுள்ள 331158 குடும்ப அட்டைதாரர்களுக்கு கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 384 முழு நேர நியாயவிலைக் கடைகள் மற்றும் 219 பகுதி நேர நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் 03.1.2023 முதல் 08:1.2023 முடிய வழங்கப்பட்டுள்ளது.


டோக்கன் வழங்கப்பட்ட அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு  09.01.2023 முதல் 13.01.2023 முடிய அனைத்து நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.  என மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.




 


இந்நிகழ்ச்சியில் கரூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.கந்தராஜா, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.தட்சிணாமூர்த்தி, கரூர் துணைப்பதிவாளர்கள் மற்றும் மேலாண்மை இயக்குநர் திருமதி. அபிராமி, திரு.ராஜசேகரன்(பொவிதி), மாமன்ற உறுப்பினர்கள் திரு.கோபால், திரு.தியாகராஜன், திரு.பூபதி, திரு.கார்த்திக்குமார்  மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


பொங்கலுக்கு செங்கரும்பு விற்பனை துவங்கியது


ரேஷன் கடைக்கு செல்லும் கரும்பு தமிழக முதல்வரின் உத்தரவுக்கு இணங்க ரேஷன் கடை பயனாளர்களுக்கு இலவசமாக பொங்கல் கரும்பு வழங்கப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து அரசை கரும்பு விவசாயிகளிடமிருந்தும் எவ்வித இடை தரகரும் இல்லாமல் நேரடியாக கரும்பை கொள்முதல் செய்து அனைத்து ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. இதனால் ரேஷன் கடை அதிகாரிகள் மூலமாக கரும்பு வயலுக்கே சென்று தரமான கரும்புகளை தேர்வு செய்து அதை கூலி ஆட்கள் மூலம் வெட்டி லாரிகளில் ஏற்றிக்கொண்டு செல்ல திருக்காட்டுப்பள்ளி அருகே கண்டமங்கலம் பகுதியில் கரும்பு விவசாயிகளிடம் தரமான கரும்புகளை வெட்டி கட்டு கட்டாக கட்டி ஒரு கட்டுக்கு 10 கரும்பு வீதம் அரசு நிர்ணயத்த விளக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.