Pongal 2024: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

அனைத்து மதத்தினரும் இணைந்து சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டு மாட்டு வண்டியில் ஏறி பயணம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Continues below advertisement

தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் விமரிசையாக நடைபெற்றது. இதில் அனைத்து மதத்தினர் இணைந்து சமத்துவ வழிபாடு நிகழ்ச்சி பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

Continues below advertisement

நிகழ்ச்சியில் அனைத்து துறை அலுவலர்கள், காவல்துறையினர், மருத்துவத்துறையினர், மலைவாழ் மக்கள், இலங்கைத் தமிழர்கள், ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து பொங்கலை கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பூ மாலை அணிவித்து வரவேற்றார். பொங்கல் விழாவிற்கு அனைத்து அலுவலர்களும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து வந்து பொங்கல் விழாவில் பங்கேற்றனர். சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வேஷ்டி சட்டையில் கலந்து கொண்டு மாட்டு வண்டியில் ஏறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உறியடித்து அசத்தினர்.

மேலும் அனைத்து மதத்தினரும் இணைந்து சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்டு மாட்டு வண்டியில் ஏறி பயணம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடத்தப்பட்டது. இதில் உறியடி போட்டியில் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு உறியடித்தனர்.

பின்னர் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த குழந்தைகளின் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக நடனமாடிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவிழா நடைபெறும் கிராமம் போல் காட்சியளித்தது.

இந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola