புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறையின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள கோயில்களின்‌ தகவல்கள்‌ அடங்கிய ஒருங்கிணைந்த கோயில்‌ மேலாண்மை இணையதளத்தை  தமிழிசை தொடங்கி வைத்தார்‌. இந்தியாவில் யூனியன் பிரதேசங்களில் முதல் முறையாக கோயில்களுக்காக இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.



புதுச்சேரி இந்து சமய அறநிலையத்‌ துறையின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள 249 கோயில்களின்‌ தகவல்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கோயில்‌. மேலாண்மை இணையதள தொடக்க விழா ஆளுநர் மாளிகையில்‌ நடந்தது. இந்த இணையதளத்தை கவர்னர்‌ தமிழிசை சவுந்தரராஜன்‌ தொடங்க வைத்து பேசியதாவது: இந்தியாவில்‌ உள்ள யூனியன்‌ பிரதேசங்களில்‌ புதுச்சேரியில்‌ தான்‌ முதன்‌முறையாக ஒருங்கிணைந்த கோயில்கள்‌ மேலாண்மை இணையதள வசதி ஆரம்‌பிக்கப்பட்டுள்‌ளது. இது மதச்சார்பின்மையோடு உருவாக்கப்பட்டுள்ளது.



எனவேதான்‌ இது இந்து சமய அறநிலையத்துறை நிறுவனங்கள்‌ மற்றும்‌ வக்ப்‌ என்ற பெயரில்‌ உள்ளது. இந்த இணையதளத்தில் 244 கோயில்கள்‌, 45 மசூதிகள்‌, சிறுபான்மையின மக்களுக்கான அரசு திட்டங்கள்‌ குறித்த தகவல்‌கள்‌ உள்ளன. எதிர்காலத்‌தில்‌ ஆன்மீகச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும்‌, வருவாயை பெருக்குவதற்கும்‌ இந்த இணையதளம்‌ உதவியாக இருக்கும்‌. கோயில்களில்‌ உற்சவரை வைத்து பூஜை செய்து, அதனை இணையதளம்‌ மூலம்‌ மக்‌கள்‌ பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும்‌ என தமிழிசை சவுந்தரராஜன்‌ பேசினார்‌. இந்நிகழ்ச்சியில்‌ இந்து சமய அறநிலையத்துறை செயலர்‌ மகேஷ்‌, தேசிய தகவல்‌ மையத்தின்‌ இயக்‌குனர்‌ சுக்லா, ஆளுநர் செயலர்‌ அபிஜித்‌ விஜய்‌சவுத்ரி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்‌ சிவசங்கர்‌ மற்றும்‌ அதிகாரிகள்‌ கலந்துகொண்டனர்‌.



https://hri.py.gov.in/ இந்த இணையத்தளத்திலிருந்து 249 கோயில்களின்‌ நிர்வாகம்‌, வரவுகள்‌, செலவுகள்‌, பூஜைகள்‌, திருவிழாக்கள்‌, அசையும்‌, அசையா சொத்‌துக்களின்‌ விவரங்கள்‌, நன்கொடைகள்‌, திருப்பணிகள்‌ மற்றும்‌ விதிகள்‌ உள்ளிட்ட அனைத்து விவரங்களையும்‌ தெரிந்துகொள்வதுடன்‌ சுவாமிகளின்‌ தரிசனம்‌, பூஜைகள்‌, திருவிழாக்கள்‌ உள்ளிட்ட விவரங்களை அறியலாம்‌.



புதுச்சேரி மாநிலத்தில்‌ உள்ள கோவில்‌ சொத்துகளின்‌ விவரங்களை திரட்டும்‌ முயற்சியில்‌ இந்து சமய அறநிலையத்‌ துறை அதிரடியாக இறங்கியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில்‌ 246 கோவில்கள்‌ உள்ளன. இவற்றை இந்து சமய அறநிலைய துறை நிர்வகித்து, பூஜைகளுக்கும்‌, கும்பாபிஷேக திருப்பணிகளுக்கும்‌ நிதியுதவி அளிக்கிறது. புதுச்சேரியில்‌ உள்ள அனைத்து கோவில்களுக்கும்‌ கோடிக்‌ கணக்கான ரூபாய்‌ மதிப்புள்ள சொத்துகள்‌ உள்ள போதிலும்‌, இவை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளவில்லை. இந்த சொத்துகள்‌ யாரிடம்‌ இருக்கிறது என்று தெரியவில்லை. காலப்போக்கில்‌, கோவில்‌ சொத்துகளின்‌ மீது முறையான கண்காணிப்பு இல்லாததால்‌, பல கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள்‌ திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கோவில்‌ சொத்துகளின்‌ விபரங்களை திரட்டும்‌ முயற்சியில்‌ இந்து சமய அறநிலையத்‌துறை அதிரடியாக இறங்கியுள்ளது.  இது தொடர்பாக அனைத்து கோவில்‌ நிர்வாகங்களுக்கும்‌ நோட்டீஸ்‌ அனுப்பி தகவல்களை சேகரிக்கும்‌ முயற்சியில்‌ இறங்கியுள்ளது. அத்துடன்‌, இந்து சமய அறநிலைய துறைக்கென தனி இணையத்தளம் ஆரம்பித்து, கோவில்‌ வரலாறு, வழிபாடு, சிறப்புகள்‌ உள்ளிட்ட அனைத்து விஷயங்களை மக்களின்‌ பார்வைக்கு வெளிப்படையாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.



இந்து சமய அறநிலையத்துறை செயலில்‌ முழு வேகத்தோடு இருந்தாலும்‌, கோவில்‌ நிர்வாகம்‌ தரப்பில்‌ போதுமான ஒத்துழைப்பு இல்லை. சில கோவில்கள்‌ மட்டுமே தகவல்களை திரட்டி தந்துள்ளன. இதனால்‌ திட்டமிட்டபடி இணையத்தளத்தில்‌ வெளியிடுவதில்‌ சிக்கல்‌ நீடித்துவருகிறது. கோவில்‌ சொத்துகள்‌ பல இடங்களில்‌ குறைந்த வாடகைக்கு விடப்பட்டுள்ளன. நகர பகுதியில்‌ பல கோடி மதிப்புள்ள இடங்களுக்கு சொற்ப ரூபாய்‌ வாடகை வசூலிக்கப்படுகிறது. அதனையும்‌ பலர்‌ முறையாக செலுத்துவதில்லை. கோவில்‌ சொத்துகளை அனுபவிப்போர்‌ வாடகை செலுத்தாமல்‌ இருக்கும்‌ தொகை பல கோவில்களில்‌ லட்சங்களை தாண்டுகிறது. இவ்வாறு பாக்கி வைப்போரில்‌ முக்கிய பிரமுகர்களும்‌ அடங்குவர்‌. இதே போல்‌ திருக்கோவில்‌ நிலங்கள்‌ விரிவாக்க பணிகளுக்கு பல விதங்களில்‌ கையகப்படுத்தப்பட்டுள்ளன. இது பற்றிய ஒருங்கிணைந்த தகவலும்‌ ஏதுமில்லை. கோவில்‌ சொத்துகள்‌ பற்றிய மந்திரத் தகவல்களை இந்து சமய அறநிலையத்துறை திரட்ட துவங்கியதால்‌, பல ஆண்டுகளாக எத்தனை ஏக்கர்‌ நிலம்‌ கபளீகரம்‌ செய்யப்பட்டுள்ளது என்பது விரைவில்‌ வெளிச்சத்துக்கு வந்துவிடும்‌.