பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடையே, எக்ஸ் தளத்தில் வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது. அவர்களது பதிவு என்ன பார்க்கலாம்.

Continues below advertisement

தீர்ப்பை வரவேற்று முதலமைச்சர் போட்ட பதிவு என்ன.?

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பை வரவேற்று, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட எக்ஸ் தள பதிவில், பொல்லாத அ.தி.மு.க நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

மேலும், அ.தி.மு.க குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்‘கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! எனவும் தனது பதிவில் அவர் சாடியுள்ளார்.

Continues below advertisement

எடப்பாடி பழனிசாமி பேட்ட பதில் பதிவு என்ன.?

முதலமைச்சர் ஸ்டாலினின் பதிவிற்கு பதில் பதிவு போட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது என அரசு என குறிப்பிட்டுள்ளார்.

உங்களைப்(ஸ்டாலின்) போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை என்றும், நடுநிலையோடு சிபிஐ சிவாரணைக்கு உத்தரவிட்டதாகவும், அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

மேலும், வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் ஸ்டாலின் என்றும் அவர் கிண்டலடித்துள்ளார்.

யார் வெட்கித் தலை குனிய வேண்டும்? என கேட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, “அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில், குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட உங்கள் அமைச்சர் மீதும், சென்னை துணை மேயர் மீதும் விசாரணை நடத்த துப்பில்லாத நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்“ என பதிவிட்டுள்ளார்.

மேலும், யார் அந்த சார் என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல், அந்த சார்-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள்(ஸ்டாலின்) தான் வெட்கித் தலைகுளிய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று, மூத்த வக்கீல்களை நியமிக்க, மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்து, 10 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் பெற்றோருக்கும் கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக வாதாடிய நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்“ என்றும் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

“நீட் ரகசியம் என்று நீங்களும், உங்கள் மகனும் மாணவர்களை ஏமாற்றிய போதே, உங்களுக்கு வெட்கம், மானமெல்லாம் இல்லை என்பது தெரிந்துவிட்டது“ என்றும், “இருப்பினும், கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால், உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் போக்சோ வழக்குகளையும் பார்த்து, கொஞ்சமாவது வெட்கித் தலைகுனியுங்கள்“ என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.