Kishore K Swamy : முன் ஜாமீனை ரத்துசெய்த நீதிமன்றம்.. கிஷோர் கே சுவாமி மீண்டும் கைது.. காரணம் இதுதான்..

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மறைந்த முதல்வர் கருணாநிதி, அண்ணா மற்றும் பெரியார் மீது கிஷோர் கே சுவாமி சமூக வலைதளங்களிலும், யூ டியூப்பிலும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

Continues below advertisement

கோவை மாநகர சைபர் க்ரைம் காவல் துறையில் முத்து என்பவர் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் கிஷோர் கே சுவாமி மீது ஒரு புகார் அளித்தார். அதில் கோவை கார் வெடிப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்ததாகவும், அப்போது கிஷோர் கே சுவாமி என்பவரின் டிவிட்டர் பக்கத்தில் ஆட்சேபத்திற்குரிய, ஆபத்து மற்றும் வெறுப்பை உருவாக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டு இருந்தார். இது இரு தரப்பினர் இடையேயான அமைதியை குலைக்கும் வகையில் இருந்ததாகவும், குற்ற நோக்கத்துடன் இரு தரப்பினர் இடையே பகைமை மற்றும் வெறுப்பை உருவாக்கும் வகையில் பதிவிட்டு இருந்ததாகவும் அவர் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கலகம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே ஆத்திரமூட்டலை ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

Continues below advertisement

வலதுசாரி சிந்தனையாளரான கிஷோர் கே.சுவாமி பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைதள பக்கங்களில் எம்பி, எம்எல்ஏ.,கள் மற்றும் தலைவர்கள் பற்றி அவதூறு பேசுவதை வாடிக்கையாக கொண்டவர். கிஷோர் கே சுவாமி சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்து வரும் நிலையில், சர்ச்சைக்குரிய நபராகவும் இருந்து வருகிறார்.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை இழிவுபடுத்தி பேசி வருவதாக அவர் மீது புகார்கள் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மறைந்த முதல்வர் கருணாநிதி, அண்ணா மற்றும் பெரியார் மீது கிஷோர் கே சுவாமி சமூக வலைதளங்களிலும், யூ டியூப்பிலும் கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றியும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தார். 

இதனைத் தொடர்ந்து அவர் மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் 153 கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1) (b) அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுதல், 505(1) (c) ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்யத் தூண்டுதல் என மூன்று பிரிவுகளின் கீழ் கிஷோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

குண்டர் தடுப்பு சட்டத்திலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் ஜாமீனில் சிறையில் இருந்து கிஷோர் கே சுவாமி வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கோவை கார் வெடிப்பு தொடர்பாக கலகத்தை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் கருத்து பதிவிட்டதாக கோவை சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கிஷோர் கே சுவாமி மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், அதற்கு முன்னதாகவே கிஷோர் கே சுவாமி முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவானது முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஜர் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்தநிலையில், பாண்டிச்சேரியில் கிஷோர் கே சுவாமியை காவல்துறையினர் இன்று காலை செய்தனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola