கரூரில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு 60 குண்டுகள் முழுக்க வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.


 




காவலர் வீரவணக்க நாளையொட்டி கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில்  உள்ள நினைவு தூணுக்கு மலர்வளையம் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். பிரபாகரன் மரியாதை செலுத்தினார். 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாளன்று லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். அன்று முதல் ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் தேதி "காவலர் வீரவணக்க நாள்" நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


 




அன்றைய தினம் நாடு முழுவதும்  பாதுகாப்புப்பணியின் போது உயிரிழந்தார் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு,  இந்த ஆண்டு உயிர் இழந்த 188 காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் காவல்துறை  ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு தூணுக்கு,  மலர்வளையம் வைத்து, 60 வது துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினார். 


 




தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் காவல்துறை அதிகாரிகள் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரேமானந்தன், மோகன், நகர துணை கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் காவலர்கள் குடும்பத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்..