காவல்துறையும் பொதுமக்களும்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பதில் காவல்துறையின் பங்கு முக்கியமானது. அந்த வகையில், எந்த பிரச்சனையாக இருந்தாலும் பொதுமக்கள் முதலில் சென்று உதவி கேட்பது காவல் துறையைத்தான். அந்த வகையில் ஒரு சில இடங்களில் காவல்துறையினர் லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்படுகிறது. பணம் கொடுத்தால் தான் வழக்கு பதிய முடியும். விசாரணை நடத்தப்படும் எனவும் மிரட்டப்படுகிறது. இதனால் வேறு வழியில்லாமல் போலீசாருக்கு பணம் கொடுத்து தங்களது புகார்களை விசாரிக்க கேட்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் போலீசார் லஞ்சம் கேட்டால் உடனே புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

Internal Vigilance Cells தொடக்கம்

இது தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறையில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை தமிழ்நாடு காவல் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், காவல்துறையின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர ஆணையரகங்களிலும் Internal Vigilance Cells அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறை அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு எதிரான ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீனமான செயல்களை தடுப்பது. கண்காணிப்பது மற்றும் இது தொடர்பான புகார்களை விசாரணை செய்வது இப்பிரிவுகளின் முக்கிய நோக்கமாகும்.

போலீசார் மீது புகார் தெரிவிக்கலாம்

இதுபோன்ற புகார்களை பொதுமக்கள் எளிதில் தெரிவிக்கும் வகையில், மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக Internal Vigilance Cells கைபேசி வாட்ஸ்அப் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. காவல்துறை அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களால் மேற்கொள்ளப்படும் ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீனமான செயல்கள் தொடர்பான புகார்களை, சம்பந்தப்பட்ட மாவட்டம் அல்லது மாநகரத்தின் Internal Vigilance Cells க்கு ஒதுக்கப்பட்டுள்ள எண்கள், பொதுமக்களின் தகவல் மற்றும் வசதிக்காக, மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக கீழே வழங்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் ஊழலற்ற காவல்துறையை உறுதிசெய்வதற்கு பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி தங்களது முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குமாறு தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொள்கிறது. புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் அவர்களது அடையாளங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். புகார் அளித்ததற்காக எந்தவொரு புகார்தாரரும் எவ்விதத் துன்புறுத்தல், அச்சுறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படமாட்டார்கள் என்று Internal Vigilance Cell புகார்தாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறது.

புகார் ரகசியமாக பாதுகாகப்படும்

பெறப்படும் அனைத்து புகார்களும் நியாயமான, பாரபட்சமற்ற மற்றும் உரிய காலக்கெடுவிற்குள் விசாரிக்கப்பட்டு, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுகிறது. Internal Vigilance Cell செயல்பாடுகள் காவல் கண்காணிப்பாளர், காவல்துறை துணைத் தலைவர், காவல்துறைத் தலைவர், காவல் ஆணையாளர், கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது உறுதி செய்யப்படும். எனவே, பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி முன்வந்து தங்களது புகார்களைத் தெரிவிக்குமாறு டிஜிபி கேட்டுக்கொண்டுள்ளார்.