பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அப்பலோவில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது வழக்கமான பரிசோதனை என மருத்துமனை தரப்பில் விளக்கம் அளிகப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை ராமதாஸ் பரிசோதனை மேற்கொள்வது வழக்கம். அதன் அடிப்படையிலேயே ராமதாஸ் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் முழு உடல் பரிசோதனை நிறைவடைந்ததும் நாளை காலை வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. முன்னதாக அவர் சமீபத்தில்தான் மரக்கன்று நட்டு தனது 86வது பிறந்த நாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ். 85 வயதாகும் இவர் சமீபத்தில்தான் தனது 86வது பிறந்தநாளை கொண்டாடினார். வயது மூப்பின் காரணமாக அடிக்கடி உடல் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தான் இந்த பரிசோதனையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு சோதனைகளும் மெற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


சில நாட்களுக்கு முன் இவர் போட்ட எக்ஸ் பதிவு மிகவும் வைரனானது. அந்த பதிவில், "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே" என தெரிவித்திருந்தது அனைவர் மத்தியிலும் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.