அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. அதில் முக்கியமாக, ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்து பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கும் தீர்மானம். அதன் அடிப்படையில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பணி சிறக்க எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!” என்று கூறியுள்ளார்.
என்ன நடந்தது:
அதிமுக கட்சி பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அதிமுகவிற்கு பொதுச்செயலாளர் பதவி உருவாக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; மேலும்,ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்யும் தீர்மானமும் நிறைவேற்றம். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதே போல, துணைச் செயலாளர் பொறுப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.
திமுக எழுச்சி பெற ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும், இரட்டைத் தலைமை நீட்டித்தால் வளர்ச்சி இருக்காது என்று கருத்து பொதுக்குழுவில் முன்மொழியப்பட்டுள்ளது.
கட்சிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி உருவாக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு துணைப் பொதுச்செயலாளர் பதவியாக மாற்றப்பட்டுள்ளது.பொதுச்செயலாளர் பதவியில் போட்டியிட 10 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
விதி 45- இல் மாற்றம்- கழக பொதுச்செயலாளர் என்பவர் கட்சி உறுப்பினர்களாலேயே தேந்தெடுக்கப்படுவார் என்பதில் திருத்தம் மேற்கொள்ளவோ, தளர்த்தவோ முடியாது. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுபவர் 5 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார். கட்சியின் துணைப் பொதுச்செயாலளரை கழக பொதுச்செயலாளர் நியமிப்பார்.
மேலும் செய்திகளை காண,
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்