தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்றும் நாளையும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. காலை 12 மணிக்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்ட கூட்டம் நடைபெற்றது. 


இந்த கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், “ வனப்பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது தமிழ்நாடு அரசின் இரு முக்கிய கொள்கையாகும். மீண்டும் மஞ்சப்பை என்பது எனது மனதிற்கு நெருக்கமான திட்டம். இது தமிழ்நாட்டின் பன்பாட்டில் வேரூன்றி இருப்பதால் முழுமையான மக்கள் திட்டமாக மாற்ற வேண்டியது உங்கள் கடமை. பிளாஸ்டிக் மாசுபாட்டை தடுக்க பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களின் மனநிலையை இயற்கைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு மாற்ற வேண்டும். இதனால் நமது மாநிலம் பசுமை சார்ந்த எதிர்க்காலத்தை நோக்கி வளர முடியும். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வன அலுவலர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடுப்பதற்கான பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். மீண்டும் மஞ்சப்பை திட்டத்திற்கான விழிப்புணர்வை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அலுவலர்களோடு உறுதி செய்வதோடு அவர்களின் செயல்பாடுகளில் பள்ளி, சுய உதவிக் குழு உள்ளிட்ட அனைத்து பிரிவினர்களையும் ஒன்றிணைக்க வேண்டும்.


பிளாஸ்டிக் அல்லாத பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். அனைத்து கடல்லோர மாவட்ட ஆட்சியர்களையும், கடலோர மாவட்ட வன அலுவலர்களையும் கடல் அரிப்பை தடுக்கவும் கரையோர பகுதிகளின் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதி செய்ய வழிமுறைகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அத்தகைய நமது முயற்சிகள் அனைத்தும் மக்களை ஈடுபடுத்தி மேற்கொள்ளும் போது மட்டுமே நமது செயல்கள் முழு பயனை அளிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் வன விலங்குகள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் எப்போதும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும். மனித வனவிலங்கு முறன்பாடுகள் உடனடியாக கையாளப்படுவதையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை கால தாமதமின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.


காலநிலை மாற்ற உத்திகள் உள்ளூர் மட்டத்தில் செயல்படுத்தப்பட்டு அதனால் உள்ளூர் மக்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சதுப்புநில தோட்டம், கடற்புறகள், பவளப்பாறைகள் வளமையோடு மீட்டெடுப்பதை கவணம் செலுத்த வேண்டும். பசுமை தமிழ்நாடு இயக்கம் சங்க காலத்தை சேர்ந்த 18 வகை மரங்களை நட்டுள்ளது. 14 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை அரசு நட்டுள்ளது. அந்த மரக்கன்றுகள் நல்ல முறையில் வளர மாவட்ட ஆட்சியர்களும் வன அலுவலர்களும் சிறப்பு முயற்சி மேற்கொள்ள வேண்டும். நமது மண்ணின் வளத்தை மீட்டெடுப்பத்தில் பசுமை தமிழகம் திட்டம் கவணம் செலுத்தி வருகிறது. இந்த திட்டம் கிராமபுற மற்றும் நகர்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது. வன உரிமை சட்டம் தகுதியுடைய பழங்குடியின மக்களுக்கும் தகுதி வாய்ந்த மலைவாழ் மக்களுக்கும் அனுபவ உரிமை சான்று வழங்கவும் பொதுப் பயணுக்கான அனுபவ உரிமை சான்று வழங்கவும் வழிவகை செய்கிறது. இதுவரை 11,245 தனியார் அனுபவ உரிமை சான்றுகளும் 650 பொது பயன் உரிமை சான்றும் வழங்கப்பட்டுள்ளது. பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.