ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதால் நிரம்பியது பெரிய ஆண்டான் கோயில் தடுப்பணை


 




 


அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் தண்ணீர் திறக்கப் திறக்கப்பட்டுள்ளதால் கரூர் அருகே, பெரிய ஆண்டாள் கோவில் தடுப்பணை நிரம்பிய நிலையில் உள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, வினாடிக்கு, 231 கன அடி தண்ணீர் வந்தது. வினாடிக்கு, தண்ணீர் வரத்து 327 கன அடியாக சற்று அதிகரித்தது. அமராவதி அணையில் இருந்து ஆற்றில் கடந்த 12ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


 




 


கரூர் அருகே உள்ள பெரிய ஆண்டாங்கோயில் தடுப்பணை நிரம்பிய நிலையில் உள்ளது. அமராவதி அணையில் இருந்து நிலவரப்படி ஆற்றில் வினாடிக்கு, 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், வினாடிக்கு, 440 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


90 அடி  கொண்ட அமராவதி அணையில் நீர்மட்டம் 58.63 அடியாக இருந்தது. கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு  தண்ணீர் வரத்து வினாடிக்கு, 205 கன அடியாக குறைந்தது. அந்த தண்ணீர் முழுவதும் டெல்டா பாசன பகுதிக்காக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. கீழ்கட்டளை வாய்க்கால், தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்கால், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


 




 


கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து, இல்லை 29.44 அடி கொண்ட அணை நீர்மட்டம், 7.64 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதியில் மழை இல்லாததால், நங்காட்சிஆற்றுக்கு தண்ணீர் வரத்து, இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம், தற்போது 27.55 அடியாக உள்ளது. ஆற்றில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


Join Us on Telegram: https://t.me/abpdesamofficial