பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது, அதிமுக-விற்கு கிடைத்த வெற்றி என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிமுக சார்பில் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


பேரறிவாளன் விடுதலை, அதிமுக- விற்கு கிடைத்த வெற்றி என அதிமுக அறிக்கை:


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக பேரறிவாளன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தருவதாக அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.


ஜெயலலிதா  பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்:


 பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டும். மேலும் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 6 பேருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாநில அமைச்சரவையின் தீர்மானத்தின்படி, பேரறிவாளனையும், வழக்கில் தொடர்புடைய 6 பேரையும் அதிமுக விடுதலை செய்யும் என ஜெயலலிதா கூறினார் 


தீர்ப்பிற்கு அதிகமு-தான் அடிப்படை:


அதிமுக ஆட்சியில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு தான், இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு அடிப்படையாக அமைந்துள்ளதாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


உடனே விடுதலை செய்க:


உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், பேரறிவாளனை உடனே விடுதலை செய்ய வேண்டும். மேலும் 6 பேர்களையும்  உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது.