சேலத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கொண்ட வீடியோ காண்போரை கதிகலங்க செய்கிறது. 


சேலம் மாவட்டம் எடப்பாடியில் நேற்று இரவு பயங்ரமான விபத்து ஒன்று நடைபெற்றது. அந்த விபத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் திடீரென்று மோதியுள்ளன. இந்த விபத்தில் சுமார் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 


இந்த விபத்து தொடர்பான ஒரு பேருந்தில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவியில் காட்சிகள்  வெளியாகியுள்ளன. அதில் இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் விபத்திற்கு பிறகு காயத்துடன் இருக்கும் ஓட்டுநர் மற்றும் சக பயணிகள் தொடர்பான காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளது. 


 






இந்த விபத்து நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் விரைந்து அனுப்பப்பட்டுள்ளது. தற்போது விபத்தில் காயம் அடைந்த அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தனியார் பேருந்து எடப்பாடியிலிருந்து சங்கரி பகுதியை நோக்கி பயணம் செய்துள்ளது.  அதேபோல் மறுபுறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து சங்கரி பகுதியிலிருந்து எடப்பாடியை நோக்கி சென்றுள்ளது. இந்தச் சூழலில் அந்த இரண்டு பேருந்துகளும் மோதி கொண்டதாக தெரிகிறது.  


விபத்தில் தனியார் பேருந்து ஓட்டுனரான எடப்பாடி ஏரிரோடு பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் (42), தனியார் பேருந்தில் வந்த இருப்பாளி பகுதியைச் சேர்ந்த சின்னகண்ணன் (60), கல்லூரி பேருந்து டிரைவரான மேட்டூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (32) ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த சங்ககிரி ஆர்டிஓ வேடியப்பன், எடப்பாடி தாசில்தார் லெனின், வருவாய் அலுவலர்கள் முருகேசன், வனஜா ஆகியோர் எடப்பாடி அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்தவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். முதற்கட்டமாக கன மழை பெய்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியார் கல்லூரி பேருந்து நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. விபத்து குறித்து கொங்கணாபுரம் காவல்துறையினர் விசாரித்து வருகிறார். கல்லூரி பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண