கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மக்கள் மீது துப்பாக்கிச் நடத்தக்கூடாது என்று தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க ஹென்றி திபேன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி சிவஞானம் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய மனித உரிமை ஆணையம் சீல் வைத்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாகவும், அதனை வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என ஆணையத்தில் தெரிவித்துள்ளதாக தெரிவித்த திபேன், அறிக்கை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


Flipkart | வாடிக்கையாளர்களே ரெடியா? அதிரடி ஆஃபர்.. வெளியானது ப்ளிப்கார்ட் அறிவிப்பு.!


இதனைத்தொடர்ந்து, பலியானவர்களுக்கு, பலத்த காயமடைந்தவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு என்றும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மக்கள் மீது துப்பாக்கிச் நடத்தக்கூடாது எனவும் கூறினார்கள்.


மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.  மேலும், வழக்கின் விசாரணையை நான்கு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.




2018-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் மரணமடைந்தனர். பலர் படுகாயமடைந்தனர், பல பொதுச்சொத்துகள் சேதமடைந்தன. இந்த வன்முறை தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் நியமிக்கப்பட்டது. ஆணையத்தின் இடைக்கால அறிக்கையை, கடந்த மே மாதம் ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து அளித்தார்.


இடைக்கால அறிக்கையில், ‘பாதிக்கப்பட்டவர்களின் மீதான வழக்கை வாபஸ் பெறவேண்டும். வழக்கில் சிக்கி படிக்க, வேலைக்கு செல்ல முடியாமல் தவிப்பவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார ரீதியிலான உதவிகளையும் அரசு செய்ய வேண்டும்’ ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வன்முறை தொடர்பான இடைக்கால அறிக்கையை 8 மாதங்களுக்கு முன்பு அப்போதைய அதிமுக அரசிடமும் அருணா ஜெகதீசன் சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  


Zomato | நாம ஒன்னு நினைச்சா.?! அடுத்தடுத்து வர்த்தகத்தை மூடும் சொமேட்டோ.. என்னதான் பிரச்னை?