ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் விரைவில் பிக் பில்லியன் டேவை தொடங்கவுள்ளது. அதற்கான அறிவிப்பை தங்களது வெப்சைட்டில் வெளியிட்டுள்ளது பிளிப்கார்ட். ஆன்லைன் நிறுவனங்களின் உச்சத்தில் இருக்கும் நிறுவனங்களில் பிளிப்கார்ட்டும் ஒன்று. புதுப்புது பொருட்களின் வரவு, அதிரடி தள்ளுபடி விலை, வீட்டுக்கே தேடி வரும் பொருள் என ஆன்லைன் நிறுவனங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதற்கிடையே அவ்வப்போது விசேஷ கால தள்ளுபடிகளையும் அறிவித்து வருகின்றன. 


அந்த வகையில் விரைவில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே தள்ளுபடியை தொடங்கவுள்ளது. அதற்கான அறிவிப்பை தன்னுடைய இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது பிளிப்கார்ட். ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள் பிக் பில்லியன் டேவை எதிர்பார்த்து காத்திருப்பது வழக்கமான ஒன்று. எலக்ட்ரானிக் பொருட்கள், பேஷன் பொருட்கள், அழகுசாதன பொருட்கள் என அனைத்து பொருட்களும் விலைக்கு ஏற்ப தள்ளுபடியை அறிவிக்கும் பிளிப்கார்ட். குறைந்த விலையில் எதிர்பார்த்த பொருளை வாங்கி விடலாம் என்பதால் வாடிக்கையாளர்களும் இதுமாதிரியான தள்ளுபடி நாட்களை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான ப்ளிப்கார்டின் தள்ளுபடி விற்பனை மிக விரைவில் நடக்கவுள்ளது. வழக்கமான தள்ளுபடி மட்டுமின்றி ஆக்ஸிஸ் வங்கி,  ஐசிஐசிஐ வங்கி போன்ற வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்புத்தள்ளுபடியும் உண்டு. பேடிஎம் கேஷ்பேக் ஆஃபரும் உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.




என்ன எதிர்பார்க்கலாம்?


பொருட்களுக்கு ஏற்ப தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், போட் ஹெட்போனுக்கு 80% வரை அப்டூ ஆஃபர் வழங்கப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல ஸ்மார்ட் வாட்சுகளுக்கும், டிசோ பிராண்ட வைர்லஸ் ஹெட்போனுக்கு அப்டூ 60% வரையிலான தள்ளுபடி என எதிர்பார்க்கப்படுகிறது. இண்டல் லேப்டாப்புக்கு 40% வரை அப்டூ ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது. 




வாடிக்கையாளர்களுக்கு லேப்டாப், மருத்துவ சாதனங்கள், ஸ்மார்ட் கடிகாரங்கள், ஹெட்போன்ஸ், ஸ்பீக்கர்ஸ் போன்ற எலெக்ட்ரிக் பொருட்களுக்கும், வீட்டு சாதன பொருட்களான ஃப்ரிட்ஜ் போன்ற பொருட்களுக்கும்  தள்ளுபடி அப்டூ 50% வரை தள்ளுபடி எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட தள்ளுபடி நாட்களில் இரவு 12 மணி, காலை 8 மணி, மாலை 4 மணிக்கு புது தள்ளுபடி அறிவிப்புகளை ப்ளிப்கார்ட் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையே பிளிப்கார்ட் அடிக்கடி தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அது தொடர்பான அறிவிப்புகளை ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகிறது ப்ளிப்கார்ட்.