மறைந்த முதலமைச்சர் அண்ணா நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு,  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியை மேற்கொண்டுள்ளனர். அண்ணாவின் 54வது நினைவு தினத்தையொட்டி, சென்னை திருவல்லிக்கேணி  வாலாஜா சாலையில் உள்ள  பேரரிஞர் அண்ண  சிலை அருகிலிருந்து புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாவின் நினைவிடம் வரையில் திமுகவினர் இந்த அமைதிப் பேரணியை மேற்கொண்டர். இதில் முதலமைச்சர் ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் துரைமுருகன், மா,சுப்பிரமணி, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர். பாலு உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்றர். அப்போது, அண்ணாவின் புகழை விளக்கும் பல்வேறு பதாகைகளையும் தொண்டர்கள் கையில் ஏந்திச் சென்றனர். 






பின்னர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள். அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் கருணாநிதி நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினார். இதையொட்டி, அமைதிப்பேரணி நடைபெற்ற பகுதியிலும், அண்ணா நினைவிடத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில், அமைதிப் பேரணி நடைபெற்ற பகுதியில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.






திமுக டிவிட்டர் பதிவு:


அண்ணா நினைவு தினத்தையொட்டி திமுக வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ”பேரறிஞர் அண்ணாவின் வழியில் செயல்படும் மக்களுக்கான அரசு! மக்களிடம் செல், மக்களோடு வாழ், மக்களிடமிருந்து கற்றுக்கொள் என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா. அப்படி, மக்களுக்கான அரசாக நம்முடைய அரசு செயல்படும்” என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் கருத்து மேற்கோள்காட்டப்பட்டுள்ளது. சமூக வலைதலைங்களில் அண்ணாவின் பெருமைகளை குறிப்பிட்டு, #என்றென்றும் அண்ணா என்ற ஹேஷ்டேக்கும் வைரலாகியுள்ளது.