50 ஆண்டுகால கனவு.. கண் கலங்கிய சௌமியா அன்புமணி.. இப்படி ஒரு பக்தியா ?
"பசுமை தாயகத்தின் தலைவர் சௌமி அன்புமணி, சபரிமலை கோயிலுக்கு சென்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.

ஐயப்பன் என்றாலே அனைவர் நினைவிற்கு வருவது, கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில்தான். மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலமாக சபரிமலை ஐயப்பன் கோயில் விளங்கி வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சென்று வருகின்றனர்.
அதேபோன்று அனைத்து மாதம் துவக்கத்திலும், நடைதிறப்பது வழக்கமாக உள்ளது. அப்போதும் ஏராளமானோர், விரதம் இருந்து மாலை அணிவித்து சபரிமலை கோயிலுக்கு பக்தர்கள் வருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
பிரபலங்கள் படையெடுக்கும் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஏராளமான பிரபலங்களும் படை எடுப்பது வழக்கமாக உள்ளது. அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரமுகர்கள் ஏராளமானோர், ஐயப்பன் கோவிலுக்கு சென்று தரிசிப்பது வழக்கமாக உள்ளது.
ஒரு சிலர் நேரடியாக மாலை அணியாமல் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதும் வழக்கமாக உள்ளது. சிலர் ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து, 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசிப்பதும் வழக்கமாக உள்ளது.
சபரிமலையில் சௌமியா அன்புமணி
அந்த வகையில் தமிழ்நாட்டின் முக்கிய கட்சியாக இருக்கக்கூடிய பாட்டாளி மக்கள் கட்சியின், துணை அமைப்பான பசுமை தாயகத்தில் தலைவராக இருக்கக்கூடிய சௌமியா அன்புமணி தீவிர ஆன்மீக பக்தர். சௌமியா அன்புமணி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற கோயிலுக்கு, சென்று வருவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் சௌமியா அன்புமணி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து, 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ள சௌமியா அன்புமணி , "சபரிமலையில், 18-ஆம் படியேறி சுவாமி ஐயப்பன் தரிசனம் செய்ய வேண்டும் என்பது என் சிறு வயது கனவு. 50 ஆண்டுகால வேண்டுதல் நிறைவேறியது. சுவாமியே சரணம் ஐயப்பா " என பதிவிட்டுள்ளார்.
சௌமியா அன்புமணி, 18 படி ஏறுவதற்கு முன்பாக பயபக்தியுடன் 18 படிகளை வணங்கி, ஆனந்த கண்ணீருடன் 18 படிகள் ஏறும் வீடியோ வெளியாகி உள்ளது. சௌமியா அன்புமணியின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.