பரமக்குடியில் 9ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.  


ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 14 வயது ஒன்பதாம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு  விசாரணையை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுக்கா புத்துநகரில், கடந்த பிப்ரவரி மாதம் 9ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியை சிலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது குறித்த வழக்கு பரம்க்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புலன் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணை தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஏற்கனவே இந்த வழக்கில் அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறை கைது செய்து விசாரணை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.