பாம்பன் புதிய பாலம் திறப்புக்கு பின்னர் பிரதமர் மோடி, ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசாமி கோயிலில் தரிசனம் செய்கிறார்.
புதிய பாம்பன் ரயில் பாலம்
ராமேஸ்வரத்தில் கடலுக்கு மேலே ரூ. 550 கோடி செலவில் 2.05 கிலோமீட்டர் நீளமுள்ள, புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நிலப்பகுதிக்கும், ராமேஸ்வரம் தீவுக்கும் இடையிலான கடலைக் வெறும் 5 நிமிடங்களில் கடக்க இந்த பாலம் வழிவகை செய்கிறது. இது பழைய பாலத்தில் கடக்க எடுத்துக்கொள்ளப்பட்ட, 25-30 நிமிடங்களை விட மிகவும் குறைவாகும். புதிய பாலத்தில் சோதனைகள் நிறைவடைந்து, பாதுகாப்பு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு, திறப்பு விழாவிற்கே தயாராகி விட்டது. கடந்த நவம்பர் மாதத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் செளத்திரி புதிய பாலத்தில் இருக்கும் குறைகளை சுட்டிக் காட்டி, பாதுகாப்பு குறித்த யோசனைகளையும் வழங்கினார். இதனால் சரி செய்ய கால தாமதம் ஏற்பட்டு பாலம் திறப்பு குறித்த தேதி தள்ளிப் போனது. இந்நிலையில் தான் உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொய்வுக்கு காரணம்
புதிய பாலத்தின் கட்டுமானத்தில் எஃகு வலுவூட்டல், கூட்டு ஸ்லீப்பர்கள் மற்றும் நீண்ட ஆயுள் கொண்ட ஓவிய அமைப்பு உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை ரயில்வே பயன்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 2019 நவம்பரில் புதிய பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார், மேலும் 2020 பிப்ரவரியில் RVNL இன் கீழ் கட்டுமானப் பணிகள் தொடங்கின. ஆரம்பத்தில் இது டிசம்பர் 2021 க்குள் முடிக்க திட்டமிடப்பட்டது, ஆனால் கொரோனா தொற்றுநோய் காரணமாக காலக்கெடு நீட்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாலம் திறப்பு தாமதம் ஏன்?
புதிய பாம்பன் பாலம் ஆசியாவின் முதல் செங்குத்து லிப்ட் பாலம் என போற்றப்படுகிறது. எனவே இதனை மிகப்பெரும் கனவு திட்டமாக மத்திய அரசு கருதுகிறது. இந்நிலையில் 6 -ஆம் தேதி பாம்பன் புதிய ரெயில்வே பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதாமூத்ததலைவர்கள், என பலரும்கலந்து கொள்வார்கள்என எதிர்பாக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே முழு வீச்சில் செய்து வருகிறது.