✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Palani Panchamirtham: பழனி பஞ்சாமிர்தத்தில் எந்த நெய்.?வதந்தியால் பரபரப்பு.! தமிழ்நாடு அரசு விளக்கம்.!

செல்வகுமார்   |  20 Sep 2024 05:28 PM (IST)

Palani Panchamirtham: பழனி பஞ்சாமிர்தத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யானது ஆவின் நிறுவனத்திடமிருந்து பெறப்படுகிறது என அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது. 

Palani Panchamirtham: பழனி பஞ்சாமிர்தத்தில் எந்த நெய்.?வதந்தியால் பரபரப்பு.! தமிழ்நாடு அரசு விளக்கம்.!

பழனி பஞ்சாமிர்தம் வதந்தி:

திருப்பதி லட்டுவில் பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு மாதிரிகள் இருந்ததாக ஆய்வு முடிவுகள் உறுதி செய்த நிலையில் பெரும் சர்ச்சை உருவான நிலையில், பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரவிய நிலையில், தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. 

திருப்பதி லட்டு சர்ச்சையை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் சிலர் பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் குறித்தும் வதந்தியை பரப்பினர். திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய் வாங்கப்பட்ட நிறுவனத்திடமிருந்துதான் பஞ்சாமிர்தமும் தயாரிக்கப்படுகிறது என சிலர் வதந்திகளை பரப்பினர்.

அறநிலையத்துறை விளக்கம்:

இதையடுத்து, பழனி பஞ்சாமிர்தத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யானது ஆவின் நிறுவனத்திடமிருந்து பெறப்படுகிறது என அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது. 

திருப்பதி லட்டு சர்ச்சை:

ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  சேர்க்கப்பட்டதாக தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவன பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்ததுது. முந்தைய ஆட்சியில் , லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக முதலமைச்சர் சந்திரபாபு கூறியிருந்தார்.

பக்தர்களால் மிகவும் பிரசாதமாக கருதப்படும் திருமலை லட்டுகள், சுத்தமான நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தி கடந்த ஆட்சியில் தயாரிக்கப்பட்டதாக  முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். கோயிலில் பிரசாதம் தரமற்ற பொருட்களால் தயாரிக்கப்பட்டதாகவும், நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பிரசாதத்தின் தரத்தை மீட்டெடுத்துள்ளதாகவும், தூய்மையான பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதாகவும் சந்திரபாபு கூறினார். 

இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, புகழ்பெற்ற திருப்பதி லட்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதை குஜராத்தின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் உள்ள கால்நடை மற்றும் உணவுப் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையம் ( CALF ) ஆய்வகத்தின் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் லட்டில் சேர்க்கப்பட்ட நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி மற்றும் பன்றிக்கொழுப்பு ஆகியவற்றின் தடயங்கள் இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.

ஆவின் நெய்

இந்நிலையில், சிலர் சமூக வலைதளங்களில் பழனி பஞ்சாமிர்தத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், திருப்பதி ,லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்தான் பயன்படுத்தப்படுகிறது என வதந்தியை பரப்பினர். இது தமிழ்நாடு அரசின் கவனத்திற்குச் சென்றது. இதையடுத்து, பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யானது ஆவின் நிறுவனத்திடமிருந்து பெறப்படுகிறது என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. மேலும் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. 

Published at: 20 Sep 2024 05:07 PM (IST)
Tags: Palani Ghee breaking news Abp nadu Tirupathi laddu Panchamirtham Palani Panchamirtham
  • முகப்பு
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • Palani Panchamirtham: பழனி பஞ்சாமிர்தத்தில் எந்த நெய்.?வதந்தியால் பரபரப்பு.! தமிழ்நாடு அரசு விளக்கம்.!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.