ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமிறைகளுக்கு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.


தொடர் விடுமுறை


நவராத்திரி பண்டிகையின் முக்கியமான 2 நாட்களான (சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை) தற்போது வந்துவிட்டதால், சென்னையில் இருந்து செல்லும் பேருந்துகள் மற்றும் ரயில்களில் மக்கள் கூட்டம் நேற்றுவரை நிரம்பி வாழிந்தன. சிலர் சென்ற சனிக்கிழமையும், அதற்கு ஒருநாள் முன்னரும் சென்றுவிட்ட நிலையில் நேற்றும் பலர் தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சொந்த இடங்களுக்கு விரைந்தனர். இதுவரை 12 லட்சத்துக்கும் அதிகமானோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர் என்று போக்குவரத்து துறை மற்றும் ரயில்வேயின் தரவுகள் முலம் பெறப்பட்ட தகவலகள் இதனை சுட்டிக்காட்டுகின்றன.



பிரிந்த கூட்டம்


கோயம்பேடு, சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் போன்ற முக்கிய போக்குவரத்து மையங்களில் ஐடி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களின் ஊழியர்கள் மட்டுமே கடைசி நேரத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததால் பெரிய அளவில் கூட்டம் இல்லை. ஏனெனில் அரசு ஊழியர்கள் உட்பட பலருக்கு திங்கட்கிழமை விடுப்பு விடப்பட்டு நான்கு நாள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு இருந்தது. சென்னையில் இருந்து பூஜை விடுமுறையை முன்னிட்டு 8000-க்கும் மேற்பட்ட பேருந்து சேவைகள் அரசுப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்பட்டுள்ளன. தற்போது சென்னை திரும்புவதற்கு, போதுமான பேருந்துகள் தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


தொடர்புடைய செய்திகள்: அக்டோபர் மாதம் எந்த ராசிக்கு ராஜயோகம்? எந்த ராசிக்கு கவனம் தேவை? முழு ராசிபலன்கள்...!


பேருந்து பயணிகள்


பேருந்துகளில் மட்டும் 6.10 லட்சம் பேர் பயணித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சென்னையில், இருந்து செப்.,30ல் வழக்கமாக இயங்கும், 2,100 பஸ்களுடன் கூடுதலாக, 744 பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், அவற்றில், 62 ஆயிரத்து, 200 பேர் பயணித்தனர். அக்.,1ல் வழக்கமான பஸ்களுடன், 1,200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணித்துள்ளனர். இரண்டு நாட்களில் சென்னையில் இருந்து மட்டும், 3 லட்சத்து, 12 ஆயிரத்து, 145 பேர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அதே போல, செப்.,30, அக்.,1 ஆகிய நாட்களில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து, 1 லட்சத்து, 92 ஆயிரத்து, 343 பேர் சொந்த ஊர்களுக்கு அரசு பஸ்களில் பயணித்துள்ளனர். அரசு பஸ்களில், 5 லட்சத்து, 4 ஆயிரத்து, 488 பேர் சரஸ்வதி பூஜை கொண்டாட்டத்துக்கு சென்றுள்ளதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.



ஆம்னி பஸ் எண்ணிக்கை


அதிக டிக்கெட் கட்டணத்தை பொருட்படுத்தாமல், பலர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல ஆம்னி பஸ்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த பண்டிகை நேரத்தில் பேருந்துகளுக்கான தேவை மிக அதிகமாக இருந்த நிலையில் பொதுவாக, சென்னையில் இருந்து கேரளாவின் எர்ணாகுளத்திற்கு 13 மணி நேரம் ஆகும், ஆனால் SETC பேருந்துகளில் 17 முதல் 18 மணி நேரம் ஆகிறது என்று சென்னையில் பணிபுரியும் எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார். போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, ​​தனியார் பேருந்துகள் தற்போது பேருந்து கட்டணத்தை 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறைத்துள்ளனர் என்றார். கூடுதல் கட்டணம் செலுத்தத் தயாராக உள்ளவர்கள் ஆம்னி பேருந்துகளைத் தேர்வு செய்ததாக அவர் கூறினார். அதிகப்படியான டிக்கெட் கட்டணம் குறித்து யாராவது புகார் அளித்தால், அவர்களின் டிக்கெட் தொகை அவர்களுக்கே திருப்பித் தரப்படும் என்றும் அவர் கூறி இருந்தார். ஆம்னி பஸ்களின் பயணம் குறித்து தமிழ்நாடு அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க மாநில தலைவர் அன்பழகன் பேசுகையில், "காந்தி ஜெயந்தி, சரஸ்வதி, ஆயுத பூஜையை தொடர் விடுமுறையை முன்னிட்டு, இரண்டு நாட்களில், சென்னையில் இருந்து இயக்கப்பட்ட, 1,910 ஆம்னி பஸ்களில், 69 ஆயிரத்து, 120 பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர். தமிழகத்தின் பிற நகரங்களில் இருந்து இயக்கப்பட்ட, 1,030 ஆம்னி பஸ்களில், 37 ஆயிரத்து, 80 பேர் என மொத்தம், 1 லட்சத்து, 6 ஆயிரத்து, 200 பேர் சென்றுள்ளனர். இதே அளவுக்கு, அக்.4, 5 ஆகிய தேதிகளிலும் பயணிகள் திரும்பி பயணிக்க வாய்ப்புள்ளது", என்று அவர் கூறினார்.