உறவினர்களுக்கு பயந்த காலம் போய் சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்பவர்களுக்கெல்லாம் பயப்படும் சூழல் உள்ளது என கரூரில் நீயா நானா புகழ் கோபிநாத் பேசினார்.
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் பகுதியில் செயல்படும் அன்னை மகளிர் கல்லூரியில் பதினாறாம் ஆண்டு ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் நிறுவனரும் முன்னாள் எம்எல்ஏவுமான மலையப்ப சாமி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரியின் தலைவர் தங்கராஜ், செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் கந்தசாமி, முதல்வர் சாருமதி, கல்லூரியின் முன்னாள் தலைவர் ராமமூர்த்தி, அறங்காவலர் மாரியப்பன் உள்ளிட்ட கல்லூரி மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக நீயா நானா புகழ் கோபிநாத் கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளிடையே சிறப்புரை நிகழ்த்தினார்.
அப்போது, உறவினர்கள் சொல்வதற்காக நான் ஏன் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என கேள்வி கேட்ட இளைய சமுதாயத்தினர், தற்போது சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்பவர்களுக்கெல்லாம் பயப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்று உங்களை ஒரு மனிதராக சமுதாயம் அங்கீகரிக்காமல் ஒரு டேட்டாவாக அங்கீகரிக்கிறது. சோசியல் மீடியாவில் உங்களைப் பற்றி குறிப்புகளை தெரிவித்துவிட்டால் அந்த விபரப்படி கடைசிவரை காப்பாற்றுவதற்காக உங்கள் நேரம் முடிந்து விடும் என்றார்.
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் கவிதை ,கட்டுரை ,பேச்சுப் போட்டி
கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில், கரூர் அரசு கலைக்கல்லூரியில், பேச்சுப்போட்டி, கவிதை மற்றும் கட்டுரை போட்டிகள் நடந்தன. பேச்சு போட்டியில் கரூர் அரசு கலைக்கல்லூரி கணிதம் ,இரண்டாம் ஆண்டு மாணவி விஜயலட்சுமி முதலிடமும், தரகம்பட்டி அரசு கலைக்கல்லூரி ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு மாணவி பவித்ரா இரண்டாம் இடமும், கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி தமிழ் முதல் ஆண்டு மாணவர் சரவணன், மூன்றாம் இடமும் பிடித்தனர். கவிதை போட்டியில்,வி எஸ் பி பொறியியல் கல்லூரி மாணவி சோனியா முதலிடமும், எம். குமாரசாமி கல்வியியல் கல்லூரி மாணவி பிரதீபா இரண்டாம் இடமும்,ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி மாணவி கனிமொழி மூன்றாம் இடமும்,பிடித்தனர். கட்டுரை போட்டியில், கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவி அபிநயா, முதலிடமும்,ஸ்ரீ அமராவதி கலை அறிவியல் கல்லூரி மாணவி ஷாலினி, இரண்டாம் இடமும்,ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி மாணவி பவித்ரா, மூன்றாம் இடமும் பிடித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக, பத்தாயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக, ஏழாயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக, 5000 ரூபாய், மாவட்ட கலெக்டர் மூலம் வழங்கப்பட உள்ளது. போட்டிகளில் ,பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ஜோதி, பேராசிரியர்கள் ராஜன், இளவரசி, லட்சுமண சிங், கௌசல்யா,அழகர், சுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.