பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசத்திற்கு, அ.தி.மு.க.வின் இரு தரப்பினரும் உரிமை கோருவதால் குழப்பம் உருவாகியுள்ளது. வரும் அக்டோபர் 30 ஆம் தேவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிமுக சார்பில் சிலைக்கு தங்க கவசம் சூட்டப்படுவது வழக்கம்.


உரிமை கோரும் இரு தரப்பு:


கடந்த 2014 ஆம் ஆண்டு, அதிமுக சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு தங்க கவசம் வழங்கப்பட்டது.


தங்க கவசத்தை பெற கடந்த வாரம் இபிஎஸ் தரப்பு திண்டுக்கல் சீனிவாசன், வங்கி நிர்வாகிகளிடம் மனு அளித்திருந்தார்.


இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான எம்.பி. தர்மர் உள்ளிட்டோரும் கடிதத்தை வழங்கியுள்ளனர்.


வங்கி பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசத்தை பெற ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.


விடாது துரத்தும் அதிம்முக அரசியல்:


இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசத்திற்கு, அதிமுகவின் இரு தரப்பினரும் உரிமை கோருவதால், இதிலும் அதிமுகவின் அரசியல் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.