ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அதிமுக உறுப்பினராக கருத வேண்டாம் என, மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மக்களவையில் அதிமுக-வுக்கு ஒரே ஒரு எம்பி உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நீதிமன்றம் ,தேர்தல் ஆணையத்தில் உட்கட்சி  பிரச்னை இருப்பதை சுட்டி காட்டி, ரவீந்திரநாத்தும் கடிதம் அனுப்பியுள்ளார்.


கலவரமான பொதுக்குழு:


கடந்த 11 ஆம் தேதி மிகுந்த பரபரப்புக்கிடையே, அதிமுக பொதுக்குழு கூடிய நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.   இதனையடுத்து அங்கு கூடியிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும், இபிஎஸ் ஆதரவாளர்களுக்குமிடையே மோதல் உண்டானது. இந்த மோதல் கலவரமாக வெடித்தது. பின்னர் பூட்டி இருந்த அதிமுக அலுவலகத்துக்குள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நுழைந்தனர்.


இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, அங்கு 144  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, காவல்துறை தனது அதிகாரத்தை பயன்படுத்தி, வருவாய் துறை மூலம், சட்டப்பிரிவு 145 பயன்படுத்தி அதிமுக அலுவலகத்தை சீல் வைத்து மூடியது.


கட்சியிலிருந்து நீக்கம்:


பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலளாராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத்தை  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பேட்டியளித்த ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட சிலரை அதிமுக கட்சியில் இருந்து நீக்குவதாக பேட்டியளித்தார். 


சபாநாயகருக்கு கடிதம்:


தற்போது எம்.பி-யாகவுள்ள ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அதிமுக உறுப்பினராக கருத வேண்டாம் என, மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லாவுக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் உட்கட்சி  பிரச்னை இருப்பதை சுட்டி காட்டி, ரவீந்திரநாத்தும் கடிதம் அனுப்பியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது